பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

“தோடே மடலே ஓலை யென்றா”      (தொல். 1586)

“நிலமே நீரே தீயே.”          (புறம்.)

இயை என்னும் சொல்லின் திரிபான ஏய் என்னும் சொற்குப் பொருந்தல் அல்லது கூடுதற்பொரு ளுண்மையால், அதன் கடைக்குறையான ஏகார விடைச்சொல், எண்ணுப்பொருளில் வந்ததென வறிக.

இதுகாறும் கூறியவற்றால், இள் என்னும் வேர்ச்சொல்லின் அடிப்படைப் பொருள் பொருந்துதல் என்பது உணரப்படும்.