ஊங்கண் = முற்காலம்.
“ஊங்க ணோங்கிய வுரவோன் றன்னை” (மணிமே. 21 181)
ஊங்கணோர் = முன்னோர்.
“தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினையின்” (புறம். 39)
முன்னிலை யிடப்பெயர்கள் முன்னால் நிற்பவனைச் சுட்டுவதால், அவை உகரச்சுட்டடியினின்றே தோன்றியுள்ளன.
| எழுவாய் | வேற்றுமையடி |
முதல்நிலை | ஒருமை ஊன் | உன் |
| பன்மை ஊம் | உம் |
| | |
இரண்டாம் நிலை | ஒருமை நூன் | நுன் |
| பன்மை நூம் | நும் |
| | |
மூன்றாம் நிலை | ஒருமை நீன் | நின் |
| பன்மை நீம் | நிம் |
| | |
நாலாம் நிலை | ஒருமை நீ | |
| பன்மை நீயிர், நீவிர், நீர் | |
| | |
ஐந்தாம் நிலை | இரட்டைப் பன்மை ஊங்கள் | உங்கள் |
| நூங்கள் | நுங்கள் |
| நீங்கள் | நிங்கள் |
சில சொற்களின் ஊகாரமுதல், ஈகாரமுதலாகத் திரியும்.
ஒ. நோ : | தூண்டு - தீண்டு |
| தூண்டா விளக்கு - தீண்டா விளக்கு |
| நூறு - நீறு |
| பூளை - பீளை |
| பூறு - பீறு |
தமிழர் தமக்குள் பிறரை இழிந்தோன், ஒத்தோன், உயர்ந்தோன் என மூவகைப்படுத்தி, அதற்கேற்பப் பெயரும் வினையும் அமைத்த காலத்தில், ஒருமைப் பெயர் இழிந்தோனையும், ஒற்றைப்பன்மைப்