பக்கம் எண் :

35

மெய்ம்முதற் சேர்க்கை

உங்கு - (துங்கு) - துங்கம் = உயர்வு.

உங்கு - (புங்கு) - புங்கம் = உயர்வு.

(துங்கு) - தூங்கு - தொங்கு.

தூங்குதல் = நிலத்திற் படாது உயரத்திலிருத்தல், தொங்குதல், தொங்கும் ஏணையில் அல்லது கட்டிலில் உறங்குதல்.

தூங்கு = தூக்கு (பி.வி.).

தூக்குதல் = உயர்த்துதல், தொங்கவிடுதல்.

தூக்கு = தூக்கணம்.

தொங்கு - தொங்கல் = குறை. தொங்கு - தொகு - தொகை = குறை.

உங்கு - நுங்கு - நூங்கு - நூக்கு - நூக்கம் = உயரம்.

உம் - சும் - சும. சுமத்தல் = தலைமேற் பொறை கொள்ளுதல்.

சும - சுமை - சிமை = மலையுச்சி.

சிமை = சிமையம்.

ME. f. AF., OF summe, somme f. L. summa, f. summus, highest. E. sum.

ME. f. OF. sohmet, sommette;

som. top, f. L. summum, neut. g. summus, E. summit.

சும - (சுமல்) - சுவல் = சுமக்கும் தோட்பட்டை.

உயர்வும் மேலும் குறித்து வடமொழியாளர் ஆளும் உத் (ut, ud) என்னும் முன்னொட்டு தமிழ் உகரச்சுட்டடிப் பிறந்ததே.

எ - டு : உத்துங்கன் (uttunga).

உத்தூளனம் (uddhulana).

துங்கன், தூள் என்பனவும் தமிழ்ச் சொற்களே.

துங்கம் - துங்கன். துகள் - தூள் - தூளி.

பின்மைச்சுட்டு

கால முன்பின்கள் ஒன்றோடொன்று மயங்குவதாலும், குறுக்காக வளரும் விலங்குகளின் (மக்கள் ஏறிச்செல்லும்) உயர்ந்த உடற்பகுதி முதுகாயிருத்தலாலும், உகரச்சுட்டு பின்புறத்தையும் குறிக்கலாயிற்று.