பக்கம் எண் :

81

அகள் - (அகண்) - அகணி = 1. உட்புறம். “கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கிற் புறணி நஞ்சு” (பழமொழி) 2. உட்புறத்தோடு கூடிய புறநார். 3. அகநாடாகிய மருதநிலம் (சூடா.). 4. நெல்வயல். “அகணியின் கரைபுரளும் எங்கணும்” (அரிசமய. குலசே. 8).

அகழ்ப்பை - அகப்பை. Te. agapa, K. agape.

ஒ. நோ : கேழ்ப்பை - கேப்பை.

அகம் = உள், உள்ளிடம், இடம், வீடு, மருதம், மனம், மார்பு, காமவின்பம், அகப்பொருள், அகநானூறு.

ம. அகம்,க. ஆகெ (age).

அகம் - அகம்பு - உள்.

அகரம் = மருதநிலத்தூர், ஊர் (பிங்.).

உகு - (உகல்) - உவல் - அவல் = 1. பள்ளம். “அவலா கொன்றோ மிசையா கொன்றோ” (புறம். 187). 2. விளைநிலம். “மெல்லவ லிருந்த வூர்தொறும்” (மலைபடு. 450). 3. குளம். உவல் - உவன்றி = நீர்நிலை. “வாய்த்தலைக்கும் உவன்றிக்குமாகப் பங்கொன்றும்” (S.I.I. Vol. II, 521)

உவனித்தல் = ஈரமாதல்.

உவல் - உவறு. உவறுதல் = சுரத்தல்.

“உவறு நீருழக்கி”             (சீவக. 966)

உவறு - உவற்று (பி.வி.) உவற்றுதல் = சுரக்கச் செய்தல்.

“ஒண்செங் குருதி யுவற்றியுண் டருந்துபு”    (அகம். 3)

உவறு - ஊறு. ஊறுதல் = சுரத்தல்.

ம., க. ஊறு,தெ. ஊரு.

ஊறு - ஊற்று.தெ. ஊட்ட, க. ஊட்டெ, து. ஊட்டி.

ஊற்றுதல் = ஒழுகச் செய்தல், வார்த்தல்.

ம.ஊத்து,மராட்டி. ஒத்து.

உவல் - (உவன்று) - ஊன்று. ஊன்றுதல் = பள்ளத்தில் அல்லது குழியில் நடுதல் அல்லது நட்டுதல், நிலைபெறுதல், நிலை நிறுத்துதல்.

ஊன்று - ஊன்றி (க்கம்பு). ஊன்று - ஊற்றம் = நிலைபேறு.

ம. ஊன்னு,தெ. ஊனு.