பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

உவல் - உவள் - உவளகம் = 1. அரண்மனையின் உட்புறம். “உவளகந் தனதாக வொடுங்கினான்” (சீவக. 243). 2. பள்ளம் (பிங்.). 3. தடாகம் (பிங்.). 4. அகழி. “உவளகங் கண்ணுற் றுவர்க்கட லிஃதென்” (குமர. பிர. திருவாரூ. 32).

உள் - உண். உண்ணுதல் = உட்கொள்ளுதல்.

உண் - உணா, உண, உணவு, உண், உண்டி.

உண் - ஊட்டு (பி. வி.) - ஊட்டம் = 1. உண்பிக்கை. 2. வளமான உணவு (nutrition).

ஊட்டு - ஊட்டி = 1. ஊட்டும் உணவு. 2. வளமான அல்லது வலுவுறுத்தும் உணவு. 3. குழந்தைகட்கு ஊட்டும் சங்கு. 4. சங்கு போன்ற குரல்வளையுறுப்பு (Adam’s apple)

உள் - (உளை) - உடை. உடைதல் = உட்குலைதல், விரிதல், பிளத்தல்.

உள் - ஊள் - ஊளை = தொள்வு, தொய்வு, உலைவு, பதனழிவு, பதனழிந்த மோர், அதையொத்த காதுச்சீழ்.

ஊளைச்சதை = ஊழற்சதை.

ஊழுறுதல் = குடைதல்.

“காழியர் மோதகத் தூழுறு விளக்கமும்”     (சிலப். 6 37, அரும்.)

ஊள் - ஊழ், ஊழ்த்தல் = 1. உட்குலைதல், பதனழிதல். “அருவிதந்த பழம்......... ஊழ்த்து” (மலைபடு. 174&80) 2. விரிதல், மலர்தல். “இணரூழ்த்து நாறா மலரனையர்” (குறள். 650) 3. முதிர்தல். “காந்த ளூழ்த்துச் சொரிவபோல்” (சீவக. 1742) 4. நாறுதல் (பிங்.).

ஊழ் - ஊசு. ஒ. நோ : காழ் - காசு. தொள் - தொளர் - தளர். தொள் - தொய். நொள் - நொய் - நொய - நொச. நோய் - நோய் - நோ.

ஊழ் - ஊழல் = குலைவு, தாறுமாறு, உலைவு நாற்றம். ஊழில் = அருவருப்பான சேறு (பிங்.). ஊழலித்தல் = பதனழிதல், சோர்தல்.

உள் - ஒள் - ஒழுகு. ஒழுகுதல் = துளைவழியாய்ச் சிந்துதல்.

ஒள் - ஓள் - ஓலை. ஓளைவாய் = சாளைவாய்.

ஓள் = ஓட்டு. ஓட்டுதல் = கையைத் துளைக்குள் இடுதல்.

ஓள் - ஓட்டை = துளை.

ஒழுகு - ஒழுக்கு. ஒழுகுதல் = 1. சிந்துதல். 2. ஒழுக்குப்போல் நீள்தல், நேராதல்.