பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

கையூடிழுத்தல்.

உருவ = துளைநெடுக, முற்றும், நன்றாக.

ஒ. நோ : E. through - thorough, thoroughly.

“புயவலியை நீயுருவ நோக்கையா”     (கம்பரா. குலமுறை. 26)

இதுகாறும் காட்டிய சொற்களெல்லாம், துளைத்தல், துளைக்குங் கருவி, துளை, துளைக்குட் செல்லல், துளையினின்று வருதல், துளையூடுருவுதல் ஆகிய பெருங்கருத்துகளையும் அவற்றின் கிளைப்புகளையுமே கொண்டு ஒரே தொடர்புற்றிருத்தல் காண்க.

துளையெனினும் பள்ளமெனினும் ஒக்கும்.

சில சொற்கள் அணிவகையிற் பொருளுணர்த்தும். அவற்றை அறிதல் வேண்டும்.

எ - டு : குடைதல் = 1. துளைத்தல் - (பருப்பொருள்).
    2. துளைத்தல்போல் நோவுறுத்தல் - (அணிப்பொருள்).