பக்கம் எண் :

119

சோனை - சோனம் = முகில். “சோனந்தரு குழலார்’’ (பதினொ. ஆளு. மும். 12). தெ. சோன, க. சோனெ.

சோனை மேகம் = பெரு மழைமுகில். “சொரிந்தது சோனை மேகம்’’ (பாரத. சம்பவ. 79).

சோனைமேகம் - சோனாமேகம். “சோனா மேகம் பொழிவதுபோல்’’ (பாரத. பதினேழாம். 135).

சுல் - (சுர்) - சுர. சுரத்தல் = 1. உட்டுளையினின்று ஊறுதல் போற்பால் சுரத்தல். 2. பால் சுரத்தல்போல் மழை பொழிதல்.

“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற் கவனளிபோல்
மேனின்று தான்சுரத்த லான்’’          (சிலப். 1 :9)

3. மழை பொழிதல்போல் இறைவன் அருள்பொழிதல். “ஆழியா விபீடண. 142

4. மிகக் கொடுத்தல். “நெடுந்தேர் களிறொடு சுரக்கும்’’ (அகம். 249). 5. (மிகக் கொடுத்தலால்) நிறைதல். “விருப்பஞ் சுரந்த சிலந்தி முடிசூட்டும் பெருமான்’’ (திருவானை. உலா. 60). 6. உடம்பில் நோய்நீர் பெருகி வீங்குதல்.

சுர - ம. சுரத்து, . ஒசர்.

சுர - சுரப்பு = 1. ஊறுகை. “சுரப்புறு சிறைப்புனல்’’ (அரிச். பு. விவாக. 107). 2. ஊற்று. 3. கறக்குமாறு ஆவின் மடியிற் பாலூறுகை, ‘ஒரு சுரப்பு ஆகிவிட்டது’ (உ. வ.). 4. கெட்ட நீரால் ஏற்பட்ட வீக்கம். ‘காலிற் சுரப்பு உண்டாயிருக்கிறது’ (உ. வ.).

சுரப்பு - சுரப்பி = நன்றாக அல்லது நிரம்பப் பால் சுரக்கும் ஆ (வு).

ஒ.நோ : கறவை = கறப்பு, கறக்கும் ஆவு. சுரை = சுரப்பு, சுரக்கும் ஆவு.

சுரப்பி - வ. சுரபி (surabhi). வடமொழியில் சுரபி என்னுஞ் சொற்குமூலமில்லை. சு - ரப். su-rabh = pleasantly affecting என்று மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகரமுதலி உன்னிப்பாகக் கூறும்.

சுர - சுரம் = உட்டுளை.

சுர - சுரங்கு - சுரங்கம் = 1. நிலவறை. 2. கீழறுக்கும் அறை. 3. திருடர் கன்னமிடச் சுவரில் துளைக்கும் துளை. 4. பாறைகளை உடைக்க வெடிமருந்து வைக்கும் குழி.