பக்கம் எண் :

141

14

துல்2 (வளைதற் கருத்துவேர்)

துல் - துலம் - துளம் - துளங்கு. துளங்குதல் = சாய்தல், அசைதல், வருந்துதல். தெ. தொளங்கு, ம. துலகு. துளம் - துடம் - தடம் = வளைவு.

“தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்’’     (தொல். சொல். 321)

“தடமருப் பெருமை’’          (நற். 120).

துல் - (துறு) - துறள் - துறடு = வளைந்த கத்தி அல்லது கருவி. க. தொறடு,

துறடு - துறட்டு = 1. முண்மரவகை. 2. சிக்கல். 3. ஏதம் (அபாயம்). “ஆங்கோர் துறட்டுண் டதனையான் சொல்வேன்’’ (விறலிவிடு. 150).

துறடு - துறட்டி = 1. அங்குசம். 2. காய் பறிக்கும் துறட்டுக்கோல். 3. சிக்கு. 4. துறட்டிச்செடி.

ப., க. தொறடு, . த்ரோட்டி. துறட்டுமுள் = 1. செடில். 2. துறட்டிச்செடி. துறட்டி- தோட்டி = 1. அங்குசம். “உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்’’ (குறள். 24). 2. கொக்கி. 3. பகைவர் பாதத்தைக் குத்த நிலத்திற் பதிக்கப்படும் கூரிய படைக்கருவி. “தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு’’ (தொல். பொருள். 65, உரை).

. தோட்டி (d), . தோட்டி.

துல் - தில் - (திர்) - திரி. திரிதல் = 1. வளைதல். 2. திரும்புதல், திரும்பிவருதல். “ஒன்றைச் செப்பினை திரிதி யென்றான்’’ (கம்பரா. அங்கத. 10). 3. திசை திரும்புதல். “நாராசத் திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம்’’ (மணிமே. 27 55 - 6). 4. சுற்றுதல். 5. சுழலுதல். “வலந்திரியாப் பொங்கி’’ (பு. வெ. 9 12). 6. அலைதல். “வண்டாய்த்