திரிதருங் காலத்து’’ (நாலடி. 284). 7. திருகுதல். “திரிந்து மறிந்துவீழ் தாடி’’ (கலித். 15). 8. வேறுபடுதல். “நாஅல் வேத நெறி திரியினும்’’ (புறம். 2). 9. எழுத்து மாறுதல். “தோன்றல் திரிதல் கெடுதல்’’ (நன். 154). 10. சொல் மாறியமைதல். “சொற்றிரியினும் பொருள் திரியா வினைக்குறை’’ (நன். 346). 11. மயங்குதல். “திரிந்தயர்ந் தகன்றோடி’’ (பரிபா. 3 :54). 12. கெடுதல். (திவா.). க. திரி, தெ. திருகு, ம. திரிக்க. திரித்தல் = 1. சுழற்றுதல். “எஃகுவலந் திரிப்ப’’ (திருமுருகு. 111). 2. முறுக்குதல். ‘கயிறு திரிக்கிறான்’ (உ. வ.). 3. திரும்பச் செய்தல். “சென்றுசென் றழியு மாவி திரிக்குமால்’’ (கம்பரா. மாயாசனக. 23). 4. அலைவித்தல். “கொடிப்புள் திரித்தாய்’’ (திவ். பெரியதி. 1 :10: 2). 5. வேறுபடுத்துதல். “அறிவு திரித்து’’ (மணிமே. 23 :39). “துயவென் கிளவி அறிவின் திரிபே’’ (தொல். 851). 6. திரிகையில் மா வாக்குதல். 7. பொருள் மாற்றுதல். 8. சொல்வடிவு மாற்றுதல். 9. மொழிபெயர்த்தல். 10. மடக்கின் முதலெழுத்தை மாற்றுதல். 11. சேதித்தல். “அவனுருவு திரித்திட்டோன்’’ (பரிபா. 5 :35). ம. திரிக்க, க. திருகிசு. திரி - திரிவு = 1. வேறுபாடு. “திரிவின்றித் துஞ்சேமென மொழிதி’’ (பு. வெ. 12 15). 2. திரிபுக்காட்சி. “ஐயமே திரிவே யென்னு மவையற’’ (விநாயகபு. 2 46). க. திரிவு. திரிவு - திரிபு = 1. வேறுபாடு. “குறிதிரி பறியா வறிவனை’’ (கலித். 39 46). 2. (வீடுபேற்றிற்கு இடையூறாய் நிற்கும்) மயக்க அறிவு. 3. முதலெழுத்தல்லாத தொடர்கள் எழுத்தொத்து வரும் மடக்கு. திரிசொல் = 1. வேறுபட்ட சொல். 2. இயற்சொல்லினின்று வேறுபடுத்தி யமைக்கப்பட்ட சொல். “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்று’’ (தொல். 880). திரிகல் = மாவரைக்குங் கல். “திரிக லொப்புடைத் தாய.... . தொண்டகம்’’ (கல்லா. 24 13). திரிமரம் = கூலம் அரைக்கும் மரம். “களிற்றுத்தாள் புரையுந்திரிமரப் பந்தர்’’ (பெரும்பாண். 187). திரி - திரிகை = 1. திரிகல். 2. குயவன் சக்கரம். “குயவர் திரிகையென’’ (கம்பரா. மூல பல. 165). 3. கூத்தின் சைகைவகை. (சிலப். ப. 81). திரி - திகிரி = 1. வட்டவடிவு (பிங்.). 2. குயவன் சக்கரம். “அத்திகிரிபரித்த பச்சை மண்ணென லாகும்’’ (காஞ்சிப்பு. திருநகரம். 76). 3. சக்கரப்படை. “கால நேமிமே லேவிய திகிரிபோல்’’ (கம்பரா. சித்திர. 40). 4. கதிரவன். “விசும்புடன் விளங்கும் விரை செலற்றிகிரி’’ |