பக்கம் எண் :

143

(அகம். 53). 5. வண்டிச்சக்கரம். 6. வண்டி. 7. தேர். “சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன்’’ (ஞானா. 7 17). 8. அரசாணை. “தீதின் றருள்கநீ யேந்திய திகிரி’’ (மணிமே. 22 16). 9. உருளை. “ஒருதனித் திகிரி யுரவோன்’’ (சிலப். 4 2).

திர் - திரு - திருகு. திருகுதல் = செ. குன்றியவி. - 1. முறுகுதல். “பரிதிசினந் திருகிய கடுந்திறல் வேனில்’’ (பெரும்பாண். 3). 2. மாறு படுதல். “திருகு சிந்தையைத் தீர்த்து’’ (தேவா. 338 2). செ. குன்றாவி. - 1. முறுக்குதல். “யாக்கையைத் திசைமுகன் படைசென்று திருக’’ (கம்பரா. பாசப். 58). 2. பின்னுதல். “திருகு குழலுமை நங்கை’’ (தேவா. 657 3). 3. திருகிப் பறித்தல் தெ. திருகு (g), . திருகு (h). திருகுவலி = உடம்பை முறுக்கும்நோவு. திருகு - திருகி. தேங்காய் திருகி = ஒரு கருவி.

திருகாணி = 1. முறுக்காணி (screw). 2. அணியின் திருகுமரை. 3. ஒருவகைக் காது மூக்கணி. க. திருகாணி (g). கொண்டைத் திருகு = கொண்டையிலணியும் ஓர் அணி. திருகு - திருக்கு = 1. முறுக்கு.
2. முடக்கம். “மதிற்றிருக்காற் .......... பெயர் திரு முடங்க லென்றார்’’ (திருவாலவா. 47 14). 3. மாறுபாடு. “பெருந்திருக் குளத்துளான்’’ (திருவாலவா. 16 34). 4. வஞ்சனை.

தித்திருக்கு = பெருவஞ்சனை.

திரு - திரும். திருமல் = திரும்புதல். “உண்பொருந் திரும்தின்’’ (நன். 137).

திரும் - திரும்பு. திரும்புதல் = 1. வளைதல். 2. கதிரவன் சாய்தல். 3. விலகுதல். 4. மாறுதல். 5. மீளுதல். 6. பிசகுதல். திரும்ப = மறுபடி, அடுத்து, மீள. திரும்பவும் = மறுபடியும், மேலும், மீண்டும். திரும்பத் திரும்ப = அடிக்கடி, மேலும் மேலும், மீண்டும் மீண்டும். திரும்பி = திரும்ப. திரும்பியும் = திரும்பவும் (உ. வ.).

திரும்பு - திருப்பு. திருப்புதல் = 1. திரும்புவித்தல், மடக்குதல். ‘ஆட்டு மந்தையைத் திருப்பினான்’ (உ. வ.). 2. மாற்றுதல். “கயவர் குணமட்டுந் திருப்ப வசமோ’’ (குமரே. சத. 39). 3. முறுக்குதல். 4. நடை பெயர்த்தல். இது விவிலியத்தின் புதிய திருப்புதல். (கிறித்தவ வழக்கு). 5. மொழிபெயர்த்தல். திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (உ. வ.). 6. பாடத்தை மறுமுறை ஓதுதல். 7. கை பை கலம் முதலியவற்றை மேல்கீழாக அல்லது தலைகீழாகக் கவிழ்த்தல். 8. அடகு வைத்ததை மீட்டல். 9. வாங்கினதைத் திரும்பக் கொடுத்தல். 10. ஒருவர் அனுப்பினதை ஏற்றுக் கொள்ளாது திரும்புவித்தல். 11. பொத்தக ஏட்டின் பக்கத்தைத்