தள்ளுதல். 12. செய்வினையைச் செய்தவர்மேல் ஏவுதல். 13. நஞ்சைமாற்றுதல். க. திருகிசு, தெ. திப்பு. திருப்பு = ஒருமுறை போய் வருகை (trip). திருப்பு - திருப்பம் = 1. திரும்புகை. “வடபத்திரசாயி முத்திருப்பங் கொண்டு’’ (குருபரம். 77). 2. திரும்புகோடி. 3. வாழ்க்கையில் அல்லது கதையில் நேரும்பெருமாற்றம் (turning point). திரும்பு - திறம்பு. திறம்புதல் = மாறுபடுதல், மீறுதல், விலகுதல். திரு - தெரு - தெரும். தெரும்வரல் - தெருமரல் = 1. மனச் சுழற்சி. “அலமரல் தெருமரல் ஆயிரண்டுஞ் சுழற்சி’’ (தொல். சொல். 311). 2. அச்சம் (திவா.). தெரும் வருதல் - தெருமருதல் = மனஞ்சுழலுதல். “வளைமுன்கை பற்றிநலியத் தெருமந்திட்டு’’ (கலித். 51) தில் - தெல் - தென். தென்னுதல் = (செ. குன்றியவி.) - 1. கோணுதல். 2. சாய்தல். (செ. குன்றாவி.) - நெம்புதல். பல் தென்னிக்கொண்டிருக்கிறது என்பது உலக வழக்கு. தென் - தென்னை = பெரும்பாலும் கோணி வளரும் மரம். “பல்வகை யுதவி வழிபடு பண்பின் அல்லோர்க் களிக்கும் அதுமுடத் தெங்கே’’ (நன். 35) தென் - தென்கு - தெங்கு = 1. தென்னை. “தெங்கி னிளநீ ருதிர்க்கும் வளமிகுநன்னாடு’’ (புறம். 29). 2. தெங்கந்தீவு. 3. போர்ச்சேவலின் திறங்குறிக்கும் குழூஉக்குறிகளுள் ஒன்று. “தெங்குக்குத் தெங்குவெல்லும் எனக் கோழிகளின் திறமறிந்துவிடுதல்’’ (பு. வெ. 12, வென்றிப். 6, உரை). க. தெங்கு, ம. தெங்ங. தெங்கு - தெங்கம். “தெங்கங்களு நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணற்படப்பை’’ (தேவா. 846 3). தெங்கங்காய் - தேங்காய். “தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்’’ (யாப். வி. 95, ப. 372). தெ. தெங் (க்)காய, ம. தேங்ஙா. தென் - தென்று - தெண்டு. தெண்டுதல் = நெம்புதல், கிளப்புதல். |