பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

15

துல்3 (துளைத்தற் கருத்துவேர்)

துல் - துன் = துளை, வளை. எலித்துன் = எலிவளை. துன்னெலி = வளைதோண்டும் எலி. துன் - துன்னு. துன்னுதல் - துளைத்தல், உழுதல்.

துன்னூசி = கலப்பைக் குத்தி. “கொழுச் சென்றவழி துன்னூசி இனிது செல்லுமாறு போல’’ (தொல். சி. பாயி. நச். உரை). துன் - துன்னம் = உழவு, ஊசித்துளை (பிங்.).

தெ. துன்னு (dunnu), to Plough.

தெ. துன்ன போத்து = உழவெருமை.

துன் - துன்னல் = துளை. ஒ.நோ : E. tunnel. ‘‘tunnel = 1. Artificial Subterranean Passage through hill etc. or under river etc; Subterrauean Passage dug by burrowing animal; (Mining) adit or level open at one end; main flue of chimney’’.

[ME, f. OF. tonel & tonnelle, dim of tonne TUN] - எருதந்துறைச் சிற்றகர முதலி (C. O. D.).

துன் - தொன் - தொன்னை = துளையுள்ளது போன்ற இலைக்கலம். “கைக்கேயிலை கொண்டு தொன்னையுங் கொண்டு’’ (தனிப்பா.), 2. எச்சிற் கல்லை போன்ற இழிந்தோன். (W.).

தெ., க. தொன்னெ (donne).

ஒ.நோ : E. tun.

‘‘tun = 1. Large cask for wine, beer, etc., esp. formerly as measure of capacity (252 wine gallons); brewer’s fermenting-vat’’. [OE tunne = OHG, ON tunna, f. Gaulish tunna.

தொன்னைக்காது = தொன்னைபோல் மடங்கிய காது.

துள் - துள - துளவை = தொளை (யாழ். அக.). துள் - துளை. துளைதல் =1. நீரில் விளையாடுதல் “ஆனந்த வெள்ளத் துறையிலே