பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

தின் - தின்றி = தின்பண்டம், உணவு (திவா.). க. திண்டி.

தின்றிப் போத்து = பேருண்டியான். க. திண்டிப்போத்த.

தின்னி = அடிக்கடி யுண்பவன், பேருணவினன். தின் - தீன் = உணவு. “தீனுணாதன’’ (கம்பரா. சேதுபந்தன. 28). ம. தீன்.

தீன் - தீனி = 1. சிற்றுண்டி. 2. விலங்குணவு. 3. இன்சுவை யுண்டி. “தீனியிலாசை தெவிட்டாது தேவர்க்கும்’’ (திருமந்.)

. தீன்., க., து. தீனி.

தின் - திற்று - தீற்று. தீற்றுதல் = 1. ஊட்டுதல். “நென்மாவல்சி தீற்றி’’ (பெரும்பாண். 343). 2. சுண்ணம் சுதை முதலியவற்றாற் சுவரைப் பூசுதல். 3. நிறமூட்டுதல். “வெண்மை தீற்றிய ..... மாளிகை’’ (கம்பரா. நகரப். 27). 4. சாம்பல் முதலியவற்றால் பல்விளக்குதல்.

துல் - துள் - துண்பு - தும்பு = உட்டுளை, துளையுள்ள உறுப்பு, உறிஞ்சி.

தும்பு - தும்பா = 1. உட்டுளையுள்ள சுரைக்குடுக்கை. 2. குடுக்கைக் கலம். 3. கடிகலவகை. தும்பா - வ. தும்ப.

தும்பு - தும்பாலை = சுரைக்காய், சுரைக்குடுக்கை.

தும்பு - தும்பி = 1. சுரை (பிங்.). “கமுகு மரத் தும்பி’’ (சைவச. பொது. 277). 2. குடிகல வகை. தும்பி - வ. தும்பீ.

3. தேனுறிஞ்சும் உறுப்புள்ள வண்டு (பிங்.). “துவைத்தெழு தும்பி’’ (அகம். 317).

. தும்பி, க., து. தும்பி. தும்பிப் பதக்கம் = வண்டின் வடிவாகச் செய்யப்பட்ட பதக்கம். “தும்பிப் பதக்கவிலை சொற்பமோ’’ (விறலிவிடு. 698).

4. உட்டுளையுள்ளதும் கைபோல் உதவுவதுமான நீண்ட மூக்கையுடைய யானை (பிங்.). “தும்பியை யரிதொலைத் தென்ன’’ (கம்பரா. வாலிவதை. 51).

தும்பிக்கை = யானைக்கை, துளையுள்ள கை.

தும்பிமா = வண்டு துளைத்த மாம்பழம்.

தும்பு - துப்பு = 1. துருவியாராய்தல். 2. உளவு. 3. உள வடையாளம். க., து. துப்பு (tubbu).

தும்பு - தூம்பு = 1. உட்டுளை. “தூம்புடைத் தடக்கை’’ (புறம். 19). 2. உட்டுளைப் பொருள் (பிங்.). 3. மதகு. “குளந்தூம்பு விட்டு’’ (சீவக. 2760). 4. மூங்கில் (திவா.). 5. மூங்கிற் குழாய். “தூம்பகம்