பக்கம் எண் :

153

பழுநிய தீம்பிழி மாந்தி’’ (பதிற். 81 21). 6. மூங்கிலால் ஆகிய இசைக்கருவி. “கழைவளர் தூம்பின் கண்ணிட மிளிர’’ (மலைபடு. 533). 7. மரக்கால். 8. இடுக்குவழி (யாழ். அக.). 9. மனைவாயில். தூம்பின் மனை’’ (மணிமே. 28 5). 12. தோற்கூனை. 13. மேனிலையி லிருந்து மழைநீர் விழுங்குழாய்.

ம., க. தூம்பு, தெ. தூமு.

தூம்புக்கை = தும்பிக்கை (உ. வ.).

தூம்புவாய் = சாய்கடை (திவா.).

தூம்பு - தூம் = 1. முகத்தலளவை வகை. எ-டு: குப்பத்தூம், தேவதூம் (W.). 2. ஒரு நிறை.

தூம்பு - ஒ.நோ : L. tubus, E. tube.

தூம்பு - தூம்பல் = சுரை (மலை.).

தூம்பு - தூம்பா. தூம்பா மடை = சாய்கடை (நெ. வ.).

தும்பு - தொம்பு - தொம்பை = மூங்கிலாலான நெற்குதிர். “அழகானரம்பை, அரிசி கொட்டுந் தொம்பை’’ (உ. வ.). . தொம்பெ.

தொம்பை - தொப்பை = 1. தொந்தி. “தொப்பையொரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே. ’’ (தக்கயாகப். 229). 2. கொப்புளம் (யா.).

தொப்பை (வயிறு) - தெ. தொப்ப (dobba).

துள் - துய். துய்த்தல் = 1. உண்ணுதல் (துளைபோன்ற வாய்க்குட் செலுத்துதல்). ஒ.நோ : துல் - துன் - தின். “புதுப்பூத் துய்த்த வாய’’ (அகம். 15). 2. புலன்களால் நுகர்தல். “கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு’’ (குறள். 1005). 3. இன்பதுன்பம் நுகர்தல். “தொல்வினைப் பயன்றுய்ப்ப’’ (கலித். 118).

துய் = உணவு. “துய்தா னுறும் வாயினை’’ (கந்தபு. தாரக. 159).

துய் - து. துத்தல் = 1. உண்ணுதல். “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி’’ (குறள். 12. நுகர்தல்.).

து = 1. உணவு (இலக். அக.). 2. நுகர்வு (யாழ். அக.).

து - துப்பு = 1. உணவு. “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி’’ (குறள். 12). 2. நுகர்ச்சி. “துப்புமிழ்ந் தலமருங் காமவல்லி’’ (சீவக. 197). 3. நுகர்ச்சிப் பொருள். “வருபவர்க்குத் துப்பமைத்து நல்கும்’’ (திருவாரூ. 480). 4. வலிமை. “கெடலருந் துப்பின்’’ (அகம். 105).