பக்கம் எண் :

25

11. கலங்கல்

நீரும் மண்ணுங் கலத்தல் கலங்கல். கல - கலகு - கலங்கு - கலங்கல். கல - கலுழ். கலுழ்தல் = கலங்கல். கலுழ் = நீர்க்கலக்கம். கலுழி = கலங்கனீர். கலுழ் - கலிழி = கலங்கனீர். கலுழி - கலிழி. கலுழ் - கலுழம் - கலுடம் - வ. கலுடி.

12. கலக்கம்

ஒரு வழியோடு பிறவழிகள் கலக்கும்போதும், அமைதியான மனத்திற் துயர்கலக்கும்போதும் ஒரு செய்திபற்றிப் பல கருத்துகள் எழும்போதும் மனங் கலங்கும். கலங்கு- கலக்கு - கலக்கம். கலக்கு (பி. வி.) -. கலக்கு, க. கலக்கு, தெ. கலத்சு. கலக்கு (பெ.) - க. கலக்கு, தெ. கலக்குவ. கலக்கம் (தொ. பெ.) -. கலக்கம், தெ. கலக்க.

கலுழ்தல் = மனங்கலங்குதல். கலவரித்தல் = கலங்குதல். கலதை, கலவரம், கலவரை என்பன கலக்கங் குறிப்பன. கலவரம் - தெ. கலவரமு, க. கலவள. கழுமுதல் = மயங்குதல். குழம்புதல் = கலங்குதல். ம. குழம்பு. குழம்பு - குழப்பு - குழப்பம் = தாறுமாறு, அமைதியின்மை. கோழம்பம் = குழப்பம்.

13. திரட்சி

பல பொருள்கள் ஒன்றாகச் சேரின் திரட்சியுண்டாகுமாதலால், கூடுதற் கருத்தில்திரட்சிக் கருத்துத் தோன்றும். குள் - குளம்பு = விலங்குகளின் திரண்ட காலுகிர். குழு - குழை = திரண்ட காதணி. குழு - கழு - கழுகு = பெரும்பறவை. கழு முரகு = மிகப் பெரிது. குள் - குண்டு - கண்டு = கட்டி, நூற்றிரளை. கண்டு - கண்டம் = பெரிய துண்டு. கணைக்கால்= திரண்ட கெண்டைக்கால். கணை = திரண்ட பிடி. கணையம் = திரண்ட எழு. குறடு = திண்னை. குண்டை (காளை), குண்டாந்தடி, குண்டடியன் (ஆண்சிவிங்கி), குண்டுக்கழுதை என்பனவும் திரட்சிபற்றியனவே.

14. பருமை

திரட்சியாற் பருமையுண்டாம்.

குரு = பருமை. “குரூஉக்களிற்றுக் குறும்புடைத்தலின்’’ (புறம். 97). கூளி = பெருங்கழுகு. கூளிப்பனை = தாளிப்பனை.

15. கனம்

திரட்சியாலும் பருமையாலும் கனமுண்டாம். குரு = கனம். “பசுமட்குரூஉத் திரள்’’ (புறம். 32). (குல்) - கல் = கனமுள்ளது.

க. , ., கல். தெ., து. கல்லு.