பள் - பள்ளை = 1. குள்ளம். 2. குள்ளமான பள்ளையாடு. ப.க. பட்டெ (dd). பள்ளை - பள்ளையன் = குள்ளன், குறுகிப் பருத்தவன். (யாழ். அக). பள்ளையன் - பள்ளச்சி = குள்ளி. பள்ளையம் = 1. பள்ளமான உண்கலம் (W.). 2. சிறுதெய்வப் படையல் உயரத்தை நோக்கக் குள்ளம் பள்ளமாயிருத்தல் காண்க. பள்ளம் - தாழ்மட்டம். பள் - பள்கு, பள்குதல் = பதுங்குதல். “பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான்” (சூளா. சுயம். 31). பள் - பண் = 1. நீர்நிலை. “பண்குலவத் தாலமிசை நடித்து” (குற்றா. தல. திருநதிச். 12). 2. நீர்நிலை போன்ற வயல், வயலிற் செய்யும் வேலை, தொழில். பண் - பண்ணை1 = விலங்கு துயிலிடம் (பிங்.). பண்ணை2 = 1. மருதநிலம். “வளநீர்ப் பண்ணையும் வாவியும்” (சிலப். 11 13). 2. வயல் (பிங்.). “பண்ணைசூழ்ந் திலகுந் திருமுனைப் பழைய நாடு” (பாரத. பாயி. 6). “வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீ ரேரியும்” (சிலப். 13 192). 3. நீர்நிலை (பிங்.). 4. மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்சுமாறு சுற்றிவரத் தோண்டி வைக்கும் பள்ளம். மரத்திற்குப் பண்ணை பிடிக்க வேண்டும் (உ.வ.). 5. நிலக்கிழாரே செய்யும் பயிர்த்தொழில் (C.G.). 6. வாரக்குடி. 7. நெற்குத்துமாறு நடுவிற் பள்ளஞ்செய்து நிலத்திற் பதிக்கப்பட்ட வட்டக்கல். 8. பல்லாங்குழி விளையாட்டிற்கு நிலத்தில் தோண்டப்படும் குழி. க. பண்ணெய. பண்ணையார் = பெருநிலக்கிழார். பண்ணையாள் = வாரக் குடியாள். பண்ணையாளி - பண்ணையாடி - பண்ணாடி = வாரக்குடி வைத்துப் பயிர் செய்யும் பெருநிலக்கிழார். பண்ணை - பணை1 = 1. விலங்கு துயிலிடம் (பிங்.). 2. யானை குதிரைகள் தங்குமிடம். “பணைநிலை முனைஇக் களிறுபடிந் துண்டென” (புறம். 23), “பணையமை பாய்மான்” (கலித். 57). பணை2 = 1. மருதநிலம். “பெருந் தண்பணை பாழாக” (புறம். 16). 2. வயல். “இரும்பணை திரங்க” (பதிற். 43.12). 3. நீர்நிலை (பிங்.). பண் - பணி. பணிதல் = 1. தாழ்தல். “பணியிய ரத்தைநின் குடையே” (புறம். 6), 2. செருக்கின்றியடங்குதல். “எல்லார்க்கு |