(செ. 1. செயல் தவறுதல். “விண்ணின்று பொய்ப்பின்” (குறள். 13). 2. கெடுதல். “பொருளென்னும் பொய்யா விளக்கம்” (குறள். 753). பொய் - பொய்தல் = 1. மணற் சிற்றில். “பொய்தலணி வண்டிமிர் மணற்கோடு” (பரிபா. 20 23). 2. மகளிர் விளையாட்டு. “பொய்த லாயமொடு” (சிலப். 6 151). பொய்..... பொய்ச்சு = பழத்தின் குற்றம் (W.), சொத்தைப் பகுதி. பொய்ச்சு - பொய்ச்சா. பொய்ச்சாத்தல் = மறத்தல் (W.). பொய்ச்சா - பொச்சா. பொச்சாத்தல் = 1. மறத்தல் - “புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க” (குறள். 719). 2. இகழ்தல். “கொடையளிக்கட் பொச்சாவார்” (ஆசாரக். 67). பொச்சாப்பு = 1. மறதி. “பொச்சாப்புக் கொல்லும் புகழை” (குறள். 532). 2. மனவுறுதியின்மை. “வன்சொல் பொச்சாப்பு” (தொல். பொருள். 274). 3. குற்றம் (பிங்.). 4. பொல்லாங்கு (W.). ஒன்றை மறந்த மனம் ஓரளவு உள்ளீடற்ற கூடு போலிருத்தலால், மறதி பொய்ச்சாப் பெனப்பட்டது. பொய் - (பய்) - பை. ஒ.நோ.: வள் = கூர்மை. வள் - (வய்) - வை = கூர்மை. பை = துணி, தோல் முதலியவற்றாலான உள்ளீடற்ற உறை. “தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால்” (நாலடி. 36) பய் - பயம்பு = 1. பள்ளம் (திவா.). 2. குழி. “கரந்து பாம்பொடுங்கும் பயம்பு” (மலைபடு. 199). 3. யானைபடு குழி. “பயம்பில்வீழ் யானை” (சிலப். 25 31). 4. நீர்நிலை (பிங்.). பய் - பயல் = பள்ளம் (பிங்.). பொள் - பொளு. பொளுபொளுவெனல் = ஓட்டைவழி ஒழுகுதற் குறிப்பு. பொளு - பொழு - போழ். போழ்தல் = (செ.கு.வி.) 1. பிளவுபடுதல். “புலம்புங் கனகுரற் போழ்வாய வன்றிலும்” (திவ். இயற். திருவிருத். 87). 2. பிரிவுபடுதல் (W.). (செ. குன்றாவி.) 1. பிளத்தல். “கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப” (பதிற். 19 2). 2. ஊடுருவிச் செல்லுதல். “கடற்குட்டம் |