பக்கம் எண் :

117

தட்டு

(துட்டு) - தட்டு.

தட்டுதல் = கையால் அல்லது கருவியால் கொட்டுதல்; அஃதாவது ஒன்று இன்னொன்றை வலிதாய் முட்டச் செய்தல்.

தட்டு - (தடை) - தறை. தறைதல் = சடைதல்.

தட்டு = தட்டையானது.

துலைத்துட்டு, தேர்த்தட்டு, பூத்தட்டு, வெற்றிலைத் தட்டு முதலியவற்றை நோக்குக. பாத்தி வரிசையான நிலப்பகுதியும் தட்டு எனப்படும்.

தட்டுக் கூடை = தட்டையான கூடை.

தட்டு - தட்டம் = தட்டையான கிண்ணம்.

தட்டு - தட்டை = தட்டையானது, அறிவிலி,

(துட்டு) - திட்டு (ஒ.கு.). திட்டுதிட்டென்று கேட்கிறது என்பது உலக வழக்கு.

தட்டை - தடை. வாழைப்பட்டையை வாழைத்தடை என்பர்.

தொப்பு

தொப்பு (ஒ.கு.). ஒருவன் துணி துவைப்பதைக் குறிக்கும்போது, தொப்புத் தொப்பென்று துணியை அடிக்கிறான் என்பது உலக வழக்கு.

தொப்பு - தப்பு - தப்புதல் = துணி துவைத்தல்.

தப்பு - தப்பை = அடி (தெ.). தட்டையானது, மூங்கிற்பற்றை. தப்பை வைத்துக் கட்டுதல் என்னும் வழக்கைக் காண்க.

தப்பு - தப்பளம் = பற்று.

தொப்பு - துவை. துவைத்தல் = துணியடித்தல், சம்மட்டியா லடித்துத் தட்டையாக்குதல்.

பொட்டு - பட்டு

பட்டுதல் என்பது தட்டுதலைக் குறித்த ஒரு பண்டை வினைச்சொல். பட்டடை என்னுஞ் சொல்லை நோக்குக.

பட்டு - பட்டம் = பட்டையான தகடு. ஒரு தலைவனுடைய சிறப்பைப் பொறித்து அவனது நெற்றியிற் கட்டும் தகடு, அத் தகட்டிற் பொறிக்கப்படும் சிறப்புப் பெயர், ஒருவனுக்கு மக்கள் புகழ்ச்சி