யாகவோ இகழ்ச்சியாகவோ வழங்கும் சிறப்புப் பெயர், தட்டையான காற்றாடி, மரப்பட்டை, சீரை (மரவுரி), சீரைபோன்ற துணி. பட்டங் கட்டுதல், பட்டஞ் சூட்டுதல், பட்டமளித்தல், பட்டப் பெயர் முதலிய வழக்குகளை நோக்குக. பட்டம் - படம் = துணி, துணியில் எழுதப்படும் ஓவியம். படம் - பணம் = தகடான காசு. படம் - படாம் = துணி, துணிக்கச்சு, யானையின் முகபடாம். படம் - படகம் = திரைச்சீலை, படமாடம். படம் - படங்கு = ஆடை, திரை, படமாடம், துப்பாக்கியின் அடி, பாதத்தின் முற்பகுதி. படங்கு -படங்கம் = படமாடம். படம் - படவு - படகு = பாய் கட்டிய தோணி. படம் - படல் = தட்டிபோன்ற அடைப்பு. படல் - படலம் = மேற்கட்டி. படல் - படலிகை = பூந்தட்டு. பட்டு -பட்டா = பட்டைவாள், வண்டிப் பட்டை, ஆவண ஏடு, ஆவணம். பட்டு - பட்டி = சீலை, தகடு, ஏடு, ஏட்டிலெழுதப்படும் அட்டவணை, மூங்கிற் பிளாச்சு, தட்டி, தட்டியாலமைத்த கால்நடைத் தொழு, கால்நடைப் பட்டியுள்ள சிற்றூர், பக்கத்துக் கொல்லைகளிற் போய் மேயும் பட்டிமாடுபோற் கட்டுக்காவலின்றித் திரிபவன். பட்டி - பட்டியல் = பொருள்விலை யட்டவணை, தட்டையான வரிச்சல். பட்டி - பட்டிகை = ஏடு, பட்டயம், சீலை, அரைக்கச்சை, மேகலை, யோகப்பட்டை. பட்டு - பட்டை = தட்டையான பொருள். மரப்பட்டை, வண்டிப்பட்டை, வாழைப்பட்டை, பொடிப்பட்டை, தோட்பட்டை, யோகப்பட்டை முதலிய பெயர்களையும், பட்டை யடித்தல், பட்டைதீர்த்தல் முதலிய வழக்குகளையும் பட்டையரம், பட்டைப்புழு முதலியவற்றையும் நோக்குக. பட்டை - பட்டையம் - பட்டயம் = பட்டைவாள், ஏடு, தகடு, செப்பேட்டாவணம். |