பக்கம் எண் :

123

முள்கா - (உள்கா) - உள்கார் - உட்கார்.

இன்றும் கல்லா மக்கள் உளுக்கார்தல் என்றே கூறுவர்.

iii. நேராதல்

குத்துக்கல்லும் பிற குத்தும் பொருள்களும் பொதுவாக நேராகக் குத்துவதால், குத்தற்கருத்தில் நேர்புக் கருத்துத் தோன்றிற்று. இங்கு நேர்பு என்றது வளையாமையை; சாயாமையை அன்று.

செங்குத்து நட்டுக்குத்து முதலிய வழக்குகளை நோக்குக.

குத்துதல் = நேராதல். குத்து - குத்தி - (கத்தி) - கதி.

கதித்தல் = நேராதல். நேர்கிழக்காகச் செல்லுதலைக் கிழக்கே கதிக்கச் செல்லுதல் என்பர் நெல்லை நாட்டார்.

கதி - கதிர் = வளையாமற் செல்லும் ஒளியிழை.

கதிர் - கதிரவன்.

iv. குத்தும் பொருள்கள்

உல் = தேங்காயுரிக்குங் கருவி.

உள் - அள் = நீர்முள்ளி.

உள் - உளி. உளி - உசி - ஊசி.

உளித்தலைக்கோல் = நுனியிற் கூரான கோல்.

உளியம் = உளிபோன்ற கூரிய நகமுள்ள கரடி.

உறு - உறும்பு = குத்தும் சிறு கரம்பைக்கட்டி.

உகிர் = நகம்.

உள் - அள் - (அய்) - அயில் = வேல்.

குத்து - குத்தி = பற்குத்தி போன்ற கருவி.

குள் - கள் - கள்ளி = ஒருவகை முட்செடி.

கள் - கண்டு = கண்டங்கத்தரி.

கண்டு - கண்டம் = கண்டங்கத்தரி, கள்ளி, எழுத்தாணி.

கண்டு - கண்டல் = முள்ளி, நீர்முள்ளி, தாழை. கண்டல் - கண்டலம் = முள்ளி.

கண்டு - கண்டகம் = முள், நீர்முள்ளி, வாள்.

கண்டகம் - கண்டகி = இலந்தை, தாழை, மூங்கில், முதுகெலும்பு.