பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

கள் - கழு. கள் - கடு = முள், முள்ளி.

குள் - கிள் - கிள்ளி - கிளி. கிள் - கிள்ளை = கூரிய மூக்கினாற் கிள்ளுவது.

குள் - கெள் - கெளிறு = முள்ளாற் கொட்டும் மீன்.

சுல் - சூல் - சூலம். சூல் = சூலம்.

“குலிசங் கதைசூல்”                                         (சேதுபு. தேவிபுர. 27)

சுள்ளெறும்பு = முட்குத்துவதுபோற் கடிக்கும் எறும்பு.

சுள் - சுணை = சிறுமுள், முட்போற் குத்தும் மானவுணர்ச்சி.

சுள் - சுர் - சுரி - சுரணை = குத்தல். குத்தும் மானவுணர்ச்சி.

சுரணைமரணை என்னும் தொடரில் நிலைமொழி தென் சொல்லும் வருமொழி வடசொல்லுமாகும்.

சுரியூசி = பனையேட்டில் துளையிடுங் கருவி.

சுரி - சுரிகை. சுரி - சூரி.

சுர் - சூர் - சூரை = ஒருவகை முட்செடி.

சுர் - சுறு - சுறுக்கு = மானவுணர்ச்சி.

சுறு - சுற - சுறா - சுறவு - சுறவம் = கூரிய செதிளால் வெட்டும் மீன்.

சுர் - சுர - சுரசுரப்பு = முட்குத்துவதுபோற் கரடுமுரடாயிருப்பது.

சுனை = சுரசுரப்பு.

துல் - துலம் = நீர்முள்ளி.

துள் - (தெள்) - தேள் = குத்தும் நச்சுயிரி வகை.

தேள் - தேளி = தேள்போற் கொட்டும் மீன்.

தூண்டு - தூண்டி - தூண்டில் = மீனைக் குத்தும் முள்.

தெள் - தெறு. தெறுக்கால் = தேள்.

நுள் - நுள்ளான் = கடிக்கும் சிற்றெறும்பு.

நுள் - நுள்ளி - நள்ளி = நண்டு.

நள்ளி - நளி = தேள். நளிர் = நண்டு.

நுள் - நெள் - நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி - நெருஞ்சில்.

முள் - முள்ளி. முளி = செம்முள்ளி.