பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்


ஒலிக்குறிப்புசொல்
எ-டு:கூகூ(கூவு)
காகாகாகம்
சலக்கு--

இங்குக் கூறப்பட்ட மூவியல்புகளும் மக்கள் செயலால் நேர் வனவே யன்றி, ஒலிக்குறிப்புகட்கு இயல்பாக வுரியனவல்ல. மக்கள் செயல் ஒலிக்குறிப்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டதென்றே அறிக.

சில ஒலிக்குறிப்புகள் துணைவினையேற்று வினையாகும்.

எ-டு: ஓ-ஓக்களி. வீர் (வீறு) - வீரிடு (வீறிடு)

(8) இருதிணை யுயிரிகளும் இயல்பாகக் கத்துவதைக் குறிக்கும் வினைச்சொற்கள் ஒலித்தல், கூப்பிடுதல் என்னும் இருபொருட்கும் ஏற்கும்.

எ-டு: கத்துதல்=ஒலித்தல்,கூப்பிடுதல்.
கரைதல்=ஒலித்தல்,கூப்பிடுதல்.
கூவுதல்=ஒலித்தல்,கூப்பிடுதல்.
விளித்தல்=ஒலித்தல்,கூப்பிடுதல்.
அழைத்தல் =கத்துதல்,கூப்பிடுதல்.

இவற்றுட் கரை அழை என்னுஞ் சொற்கள் அழுதலையுங் குறிக்கும்.

(9) தமிழிலக்கணத்திற் கொவ்வா ஒலிக்குறிப்புகள் இலக் கணத்திற் கேற்ப மாற்றப்பெறும்.

எ-டு: லொட்டு - நொட்டு, லலல - தலல.

(10) ஒலியெழும் வினைகளைக் குறிக்கும் சொற்களில், மெல்லோசை யுணர்த்த மெல்லொலி யெழுத்துகளும் வல்லோசை யுணர்த்த வல்லொலி யெழுத்துகளும் வரும்.

எ-டு:கறி-கடி.
கறி - கடி.கறித்தல், மெல்லக் கடித்தல்.

(11) ஒலிக்குறிப்புகளைப் பின்வருமாறு ஐவகையாய் வகுக்க லாம்: