| வகை | எடுத்துக்காட்டு | |
| 1 | ஒற்றைக் கிளவி | கிண், மடார், கடக்கு | | 2 | இரட்டைக் கிளவி | சலசல, நெருநெரு | | 3 | அடுக்குக்கிளவி | கிண்கிண், சல்சல், துடும்துடும் | | 4 | எதுகைக் கிளவி | தொப்புத்திப்பு, கிய்யா மிய்யா | | 5 | மோனைக் கிளவி | கிண்கிணீர், மடமடார். |
ஒருவர் அல்லது பலர் பொருளில்லாது வாயில் வந்தவாறு பேசுவதையும் கத்துவதையுங் குறித்தற்கு, ஆட்பெயரும் பொருட் பெயரும் அடுக்குக்கிளவியாக வருவதுமுண்டு. எ-டு: ஆலே பூலே, காமா சோமா, கன்னா பின்னா. (12) இரட்டைக் கிளவிகள் அசைநிலைக் காலத்தில் தனித்தும் வழங்கின. தொடர்ச்சி குறிக்கவே அவை அக்காலத்தில் அடுக்குக் கிளவிகள்போல் இரட்டின. அவை தனித்து வழங்கிய அசைநிலைக் காலம் கடந்து கழிபல வூழிகளாய்விட்டமையின், அவை தனித்து வருந்தன்மை இன்றுணரப்படவில்லை. (13) சில அடுக்குச் சொற்களும் தனிச்சொற்களும், ‘என’ அல்லது ‘என்று’ என்னும் சொற்சேர்க்கையால், ஒலிக்குறிப்புப் போலத் தோன்றும். | எ-டு: | மினுமினு வென்று மின்னுகிறது. “குறு குறு நடந்து.” சுள்ளென்று வெயிலடிக்கிறது. வெள்ளென விளர்த்தது. |
மினு என்பது மின்னு என்பதன் தொகுத்தல். குறு என்பது குறுகிய எட்டுவைத்தலைக் குறிக்கும் சொல். சுள் என்பது சுடுதலைக் குறிக்கும் பழைய வினைச்சொல். ‘மினுமினு வென்று மின்னுகிறது’ என்பது ‘அடியடியென்று அடித்தான்’ என்பது போன்ற வழக்காகும். (14) சில ஒலிக்குறிப்புகள் சுட்டொலியொடுங் கலந்துள்ளன. இவ் வுண்மை சுட்டொலிக் காண்டத்தால்தான் விளங்கும். (15) சில வொலிக்குறிப்புச் சொற்களினின்று ஒன்றும் பலவுமான வழிமுறைக் கருத்துச் சொற்கள் பிறக்கும். எ-டு: ஈ-ஈயல் - ஈசல். ஈ போன்றது ஈசல். |