உன்னுதல் = உயரவெழுதல். உசும்புதல் = உறங்கினவன் மெல்ல உடம்பசைத் தெழுதல். உசும்பு - உசுப்பு(பி.வி.). உகலுதல் = அலையெழுதல். உகளுதல் = குதித்தல். உகைத்தல் = எழுதல், எழுப்புதல், உயரக் குதித்தல். உதித்தல் = உயரவெழும்புதல். குதித்தல் = உயரவெழும்புதல். குதி - கொதி. கொந்தளித்தல் = கடல் கிளர்ந்தெழுதல். துள்ளுதல் = குதித்தல். துள் - துளும்பு. துளும்புதல் = மீன் நீர்மட்டத்திற்குமேல் மெல்லத் துள்ளுதல். துளும்பு - தளும்பு. தளும்புதல் = கலம் அசைவதால் நீர் சிறிது துள்ளுதல். தளும்பு - ததும்பு. தளும்பு - தளம்பு. துளும்பு - துடும்பு. துடும்புதல் = ததும்புதல். துள் - தள் - தள - தளதள - தளதளி - தத்தளி. தள - தளை. தளைத்தல் = கொதித்தல். பொங்குதல் = எழுதல், கொதித்தல், மிகுதல். முள் - முளி. முளிதல் - பொங்குதல். முள் - முளு. முளுத்தல் = உலையரிசி மெல்லத் துள்ளுதல். முள் - முண்டு. முண்டுதல் = துள்ளுதல், விதை முளை நிலத்துள்ளிருந்து முட்டியெழுதல். முசுமுசுத்தல் = நீர் கொதித்தல். (2) புளித்துப் பொங்குதல் சூட்டினாற் பொங்குவது போன்று புளிப்பினாலும் சில பொருள் கள் பொங்கியெழும். உகின் - எகின் = புளி. உகின் - உகினம் - எகினம் = புளி. நுர - நுரை = புளிப்பினால் எழும் சிறு குமிழி, அதன் நிறமான வெண்மை. நுரை வெண்மையாயிருத்தல் காண்க. நுரை - நரை = வெண்மை. நரைத்தல் = வெளுத்தல். |