பக்கம் எண் :

73

உவணை = தேவருலகம்.

உவச்சன் - ஓச்சன் - ஓசன் = தெய்வத்தை ஏத்துபவன்.

உறை = உயரம்.

உன் = உயர்ந்த, மிகுந்த. எ-டு: உன்மத்தம்

உன்னுதல் = மூச்சடக்கி எழுதல், உயரக் குதித்தல். உன் - உன்னதம்.

உன்னிப்பு = உயரம்.

ஊங்கு = உயர்வு, மிகுதி.

ஊர்தல் = ஏறுதல், ஏறிச் செல்லுதல். ஊர் - ஊர்தி.

ஊர்த்தம் = மேல் > ஊர்த்வம் (urdhva) - வ.

ஒய்யல் = உயர்ச்சி. ஒய்யாரம் = உயர்நிலை.

ஒயில் = ஒய்யாரம், உயரக் குதித்தாடும் கும்மி.

ஓங்கு - ஓங்கல் = யானை, மலை. ஓங்கு - ஓக்கு - ஓக்கம் = உயரம், பெருமை.

ஓச்சுதல் = உயர்த்துதல். ஓச்சு - ஓச்சம் = உயர்வு, கீர்த்தி.

“கடிதோச்சி மெல்ல வெறிக”                                    (குறள். 562)

ஒப்புதல் = உயர்த்துதல்

ஓம்புதல் = உடல் உயருமாறு வளர்த்தல், பேணுதல், காத்தல்.

ஓர்கை = யானை.

ஓவர் = ஏத்தாளர்.

குடம் = உயர்ந்த மேற்கு. கொடுமுடி = உயர்ந்த மலைக் குவடு. கோடு = மலையுச்சி.

குவி = சுவர்.

சுவல் = மேடு. சுவலை = அரச மரம். “அரசுபோ லோங்கி” என்னும் மரபுவமைத் தொடரை நோக்குக.

சுவர் = மதில்.

சுவணம் = கருடன் (உயரப் பறப்பது).

சூளிகை = செய்குன்று.