எ-டு: | கட்டு | கெத்து கப்பு | | | கண் | | சொட்டு | சொத்து சப்பு | சக்கு | சிங்கு | கிண் | | திட்டு | தொப்பு | திக்கு | தங்கு | திண் | | நொட்டு | | நொக்கு | நொங்கு, நங்கு | | பொட்டு, பட்டு | | | | | பொத்து, | | பொக்கு, பக்கு | | | மொட்டு, மட்டு | | மொக்கு, மக்கு | | | மொத்து | | மொங்கு, மங்கு | |
குறிப்பு:- (1) மேற்காட்டிய ஒலிக்குறிப்புச் சொற்கள், ஒலியின் ஒருமை குறிக்கத் தனித்தும் பன்மை குறிக்க இருமுறை அடுக்கியும் வரும். எ-டு: பழம் சொத்தென்று விழுந்தது. பழங்கள் சொத்துச் சொத்தென்று விழுந்தன. (2) இன்று அகரமுதலவாகவும் இகரமுதலவாகவும் வழங்கும் தாக்கொலிக் குறிப்புச் சொற்கள். முதற்காலத்தில் உகரமுதலவாகவும் பின்பு உகரமோனையுயிர் முதலவாகவும் வழங்கியிருத்தல் வேண்டும். (3) தாக்கொலிக் குறிப்புச் சொற்களிலெல்லாம் ஒலிக்குறிப்பும் சுட்டுக் குறிப்பும் நுண்ணிதாய்க் கலந்திருக்கும். (4)ஒலிக்குறிப்புச் சொற்களும் விரைவுக் குறிப்புச் சொற்களும் ஒன்றுபோல் தோன்றினும் வேறுபட்டவை எ-டு: | ஒலிக் குறிப்பு | விரைவுக் குறிப்பு | | பறவை படபடவென்று சிறகடிக்கிறது. | படபடத்துப் பேசினான் | | திடீரென்று விழுந்தது. | திடீரென்று வந்து விட்டான். |
(5) ஒலிகளின் வேகத்திற்கும் நீட்டத்திற்கும் தக்கவாறு ஒலிக்குறிப்புகள் அமையும். எ-டு: | குப்பென்று | புகை வந்தது. (ஒருமை) | | குப்புக்குப்பென்று | புகை வந்தது. (பன்மை) | | குபுகுபுவென்று | புகை வந்தது. (வேகம்) |
(6) ஆல், ஆர்: ஈல், ஈர்; ஏர், ஏல்; ஓல், ஓர்; முதலிய சொல்லீற்றசைகள் ஒலி நெடுமை குறிக்க வரும். |