பக்கம் எண் :

13

iii. அன்புசெய்தல்

கலந்தவரும் விரும்பியவரும் அன்பு செய்வர்.

உல் - உன் - உன்னியம் = சொந்தம். உன்னியார் = உறவினர். உன்னுதல் = பொருந்துதல்.

உன் - (அன்) - அன்பு.

உறு - உறவு. உறு - உற்றான் = உறவினன். உறுதல் = பொருந்துதல்.

உல் - ஒல் - ஒன் - ஒன்று. ஒன்றுதல் = பொருந்துதல். ஒன்னார் = பகைவர். ஒன்றார் = பகைவர்.

உள் - அள் - அளி = அன்பு. அள் - (அரு) - அருள்.

அள் - அண் - ஆண் - ஆணம் = நேயம்.

ஆண் - ஆணு = நேயம்.

உள் - (உழு) - உழுவல் = விடாது தொடர்ந்த அன்பு.

குள் - குழு = கெழு. கெழுவு = நட்பு. கெழு - கெழி = நட்பு.

குள் - கெள் - கேள் = உறவு. கேண்மை = நட்பு.

கூட்டு - கூட்டாளி = நண்பன்.

துல் - துன். துன்னுதல் = பொருந்துதல். துன்னியார் = உறவினர், நண்பர். துன்னார் = பகைவர்.

துன் - துன்று. துன்றார் = பகைவர்.

துள் - தொழு - தோழம் - தோழமை. தோழம் - தோழன். தொழுதல் = தொகுதல், கூடுதல். தொழுதி - தொகுதி.

(நுள்) - நள் - நண்பு - நட்பு. நள்ளுநர் = நண்பர். நள்ளார் = பகைவர். நள் - (நய்) - நய. நயத்தல் = அன்பு செய்தல்.

நுள் - (நெள்) - நெய் - நேய் - நேயம் - நேசம் - நேசன்.

புல் - புல்லார் = பகைவர். புல்லுதல் = பொருந்துதல். புல் - பொல் - பொரு - பொருந் - பொருந்து. பொருந்தார் = பகைவர்.

முல் - முன் - மன். மன்னார் = பகைவர்.

முள் -  முழு - முழுவல் = விடாது தொடர்ந்த அன்பு.