பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

கும் - கும்பு - கும்பம் = உருண்டு திரண்ட கலம்.

கும்பச்சுரை = உருண்டு திரண்ட சுரை.

கும்பு - கும்பா = உருண்டு திரண்ட கலம்.

குள் - கொள் - கோள் - கோளம் - கோசம் = முட்டை.

குள் - கொள் - கொட்டை = உருண்டை மகளிர் தலையணி வகை.

சுல் - சூல் = முட்டை.

“ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்”                           (பெரும்பாண். 132)

சுல் - சுன் - (சுனை) - சினை = முட்டை.

சுள் - (சொள்) - சோளம் = உருண்ட கூலம்.

முள் - முட்டை.

முள் - முட்டு - முத்து = உருண்ட கல் அல்லது விதை.

ஆமணக்கு முத்து, குருக்கு முத்து, புளிய முத்து, வேப்பமுத்து முதலிய வழக்குகளைக் காண்க.

முள் - (மள்) - மண் - மணி = உருண்ட கூலம் அல்லது விதை, உருண்ட பாசி,

நென்மணி, குன்றிமணி முதலிய வழக்குகளைக் காண்க.

iv. நீளுருட்சி

உருளை போன்றது நீளுருட்சியாகும்.

உல் - உலம் = உலக்கை.

உருள் - உருளை - உருடை( - ரோதை).

குறிப்பு; முன்பு கூடலியல் - திரளல் துறையில் குறிக்கப் பெற்ற உலக்கை குண்டலம் முதலிய ஒருசில சொற்கள் திரட்சிக் கருத்தொடு உருட்சிக் கருத்தும் கொண்டவையென அறிக.

(9) துளைத்தலியல்

ஒன்றை வலிதாய்த் தொட்டபொருள் கூர்நுனியுள்ளதா யிருப் பின், வளையாவிடத்து அதனால் முட்டப்பட்ட பொருளைத் துளைக்கும்.

வேர் மண்ணையும், ஊசி துணியையும், பூச்சி ஏட்டையும், ஆணி மரத்தையும், அம்பு உடம்பையும், கம்பி நிலத்தையும், பிற பிறவற்றையும் துளைக்கும்.