பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

குள் - குறு - கிறு - கிறுக்கு. கிறுக்குதல் = கீறிவரைதல், கோடு கீறுதல்.

கிறு - கீறு - கீறல்.

கீறு - கீற்று = கீறிய வரை, கீறிய துண்டு, துண்டு, தட்டித்துண்டு.

கீற்று - கீச்சு. கீச்சுதல் = கோடு கிழித்தல்.

கிள் - (குறு) - கூறு = பகுதி, துண்டு.

புள் - பொள் - பொளி - பொளித்தல் = கிழித்தல்.

புள் - (புறு) - பூறு - பீறு. பீறுதல் = நகத்தாற் கீறுதல்.

iii. பொறித்தல்

பொறித்தலாவது கடினமான பொருளிற் குழித்தெழுதல்.

குன் - குழி. குழித்தல் = குழித்தெழுதுதல்.

புள் - பொள் - பொளி. பொளிதல் = வெட்டுதல், எழுத்து வெட்டுதல்.

பொளி - பொறி - பொறித்தல் = குழித்தெழுதுதல்.

புள் - பிள் - விள் - வெட்டு.

iv. கிண்டுதல்

கிண்டுதலாவது பொருள்களைக் கிளைத்தல் அல்லது குடைதல்.

உளர்தல் = தலைமயிரைக் கிண்டுதல், அரும்பைக் குடைதல்.

உழுதல் = கிண்டுதல், மயிரைக் கோதுதல்.

குடைதல் = கிண்டுதல். குடை - கடை.

“நெய்குடை தயிரின்”                                             (பரிபா. 16:3)

கடை - கடலை = கடையப்படும் பயறு.

கடை - கடைச்சல்.

குள் - கொழு - கோழி = நிலத்தையும் குப்பையையும் கிளைக்கும் பறவை. கொழு = நிலத்தை உழும் காறு.

கொழு - கொழுது. கொழுதுதல் = மயிர் குடைதல்.

கொழுது - கோது.

குள் - கிள் - கிளர் - கிளறு - கிளாறு. கிளாறுதல் = கிண்டுதல்.