பக்கம் எண் :

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

வழக்கற்ற சொற்களையெல்லாம் ஒரு தனிச் சுவடியாக வெளியிட இந் நூலாசிரியன் கருதுதலின், ஈண்டு மிக வேண்டிய சொற்களே காட்டப்பெறும்.

அகவை (வயது)

அகநாழிகை அல்லது உண்ணாழிகை (கர்ப்பக்கிருகம்)

அங்காடி (கடைத்தெரு)

நாளங்காடி (பகற்கடைத்தெரு), அல்லங்காடி (மாலைக் கடைத்தெரு)

அடுத்தூண் (ஜீவனத்திற்கு விட்ட நிலம்)

அடைய வளைந்தான் (கோயிலின் புறச்சுற்றுமதில்)

அணல் (தாடி)

அணிகம் (வாகனம்)

அணியம் (readiness)

அணுக்கத் தொண்டன் (personal attendant)

அணுக்கன் திருவாயில் (கர்ப்பக்கிருகவாயில்)

அரியணை அல்லது அரசுகட்டில் (சிங்காசனம்)

அறைகூவல் (சவால் விடுதல்)

அறம் (தருமம்)

ஆசிரியன் (உபாத்தியாயன்)

ஆடவன் (புருஷன்)

ஆடிடம் (விளையாடுமிடம்)

ஆடை (வஸ்திரம்)

ஆரோசை (ஆரோகணம்), அமரோசை (அவரோகணம்)

ஆவணம் (பத்திரம்)

ஆளுங்கணம் (Managing Committee)

ஆளோட்டி அல்லது ஆளொதுங்கி (காவற்கூடு - sentry box)

ஆளோடி (குளத்தின் மதிலுள் புறமாக மக்கள் நடப்பதற்குக் கட்டிய வழி)

இசை அல்லது இன்னிசை (சங்கீதம்)

இட்டேற்றம் (பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை)