பக்கம் எண் :

77

இதழ்குவி பா (ஓட்டியம்)

இதழகல் பா (நிரோட்டியம்)

இரப்போன் (பிச்சைக்காரன்)

இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்)

இயம் (வாத்தியம்), இயவன் (வாத்தியக்காரன்)

இயம்புதல் (வாத்தியம் வாசித்தல்)

இழப்பு (நஷ்டம்)

இளந்த நாக்கடித்தல் (ஆராயாது வாக்களித்தல்)

இளவேனில் (வசந்தம்)

உகப்பு (choice)

உறாவரை அல்லது முற்றூட்டு (சர்வமானியம்)

ஊட்டகர், ஊட்டுநர் (போஷகர்)

ஊட்டுப்புரை (அன்னசத்திரம்)

ஊதியம் (இலாபம்)

ஊமையாமொழி (அஜபா மந்திரம்)

ஐயம் அல்லது இரப்பு (பிக்ஷை)

ஐயம் அல்லது அயிர்ப்பு (சந்தேகம்)

ஒப்புரவு (உபகாரம்)

ஒருநாயகம் (Universal Dominion)

ஓம்படுத்தல் அல்லது ஓம்படை (மக்களைப் பாதுகாப்பிற் கொப்புவித்தல்)

ஓசுநன் (Sailor)

ஓமாலிகை (வாசனைச் சரக்கு)

ஓரை (இராசி, இலக்கணம்)

ஓலக்கம் (அரசுவீற்றிருக்கை - Durbar)

ஓவியம் (சித்திரம்)

கண்ணெச்சில் (கண் திருஷ்டி)

கரிசு (பாவம்)

கருவூலம் (பொக்கிசசாலை - Treasury)

கலங்கரை விளக்கம் (Light House)