நூற் சொற்களைப் பிறிதொரு நூலிலும் காண்பதரிது. திருவாசகம் இன்றில்லையேல், சாழல் தெள்ளேணம் முதலிய சொற்களை வேறெங்குக் காணமுடியும்? திருவாசகத்திலும் திருவாசகமான எத்துணை அருநூல்களும் பெருநூல்களும் இறந்துவிட்டன! அவற்றிலுள்ள முழுமணிச் சொற்களனைத்தும் பெரும்பாழ்க் கடலுள் மூழ்கினவே! தொல்காப்பியம் ஒன்றில்லாவிடின் இற்றைத் தமிழர் கதி என்னவாகும்? இவற்றை யெல்லாம் தீரஎண்ணி, இறந்தன போக எஞ்சிய சொற்களையேனும் இற்றைத் தமிழர் இறவாது காப்பாராக. |