New Page 1

14

ஆராய்ச்சி உரை

கோலத்தில் மட்டுமன்றிப் பாடும் பாட்டிலும் தோன்ற வேண்டும் என்பது பெறப்படும். குறி சொல்லும் குறத்தி மலைவளத்தையும் குறிகூறும் தன் தொழிலையும் புலப்படுத்திப் பாடுகிறாள். ஏற்றம் இறைப்பவன் தன் வயலின் இயல்பையும் தண்ணீர் இறைக்கும் தொழிலின் இயல்பையும் ஏற்றப் பாட்டில் பாடுகிறான். ஆதலின் அவை வரிப் பாட்டுகளாக அமைகின்றன.

    இவ்வரிக் கூத்தில் விநோதக் கூத்து என்று ஒருவகை உண்டென்று தெரிகிறது. மேலே காட்டிய சூத்திரம் அந்த விநோதக் கூத்தையே குறிப்பது. ‘இவ்வரி யென்பதனை நிலனும் தொழிலும் தோன்ற நடிக்கும் விநோதக் கூத்து என்பாரும் உளர்’1 என்று அடியார்க்கு நல்லார் எழுதுவதிலிருந்து இது புலனாகிறது.

பல்வரிக் கூத்து

    வேறு ஒரிடத்தில், ‘இவ்வரி யென்பதனைப் பல்வரிக் கூத்தென்பாரும் உளர்’2 என்று கூறி ஒரு பழைய பாடலை மேற்கோள் காட்டுகிறார். அப்பாடல் வருமாறு:

“சிந்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலை
கொந்தி கவுசி குடப்பிழுக்கை - கந்தன்பாட்
டாலங்காட் டாண்டி பருமணல் நெல்லிச்சி
சூலந் தருநட்டம் தூண்டிலுடன் - சீலமிகும்
ஆண்டி அமண்புனவே டாளத்தி கோப்பாளி
பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி - மீண்ட
கடவுட் சடைவீர மாகேசங் காமன்
மகிழ்சிந்து வாமன ரூபம் - விகடநெடும்
பத்திரம் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்
டத்தசம் பாரம் தருணிச்சம் - கத்து
முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்
பறைபண் டிதன்புட்ப பாணம் - இறைபரவு
பத்தன் குரவையே பப்பறை காவதன்
பித்தனொரு மாணி பெரும்பிழுக்கை - எத்துறையும்
ஏத்திவரும் கட்களி யாண்டு விளையாட்டுக்
கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து - மூத்த
கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி
அழகுடைய பண்ணிவிக டாங்கம் - திகழ்செம்பொன்
அம்மனை பந்து கழங்காடல் ஆலிக்கும்
__________________________________________________
   
1. சிலப். 14 : 150, உரை.         2. சிலப். 3 : 13, உரை.