|
வ
விண்ணகக் காளி விறற்கொந்தி
- அல்லாத
வாய்ந்த தனிவண்டு
வாரிச்சி பிச்சியுடன்
சாந்த முடைய சடாதாரி -
ஏய்ந்தவிடை
தக்கபிடார் நிர்த்தம்
தரிப்பாட்டுச் சாதுரங்கம்
தொக்க தொழில்புனைந்த
சோணாண்டு - மிக்க
மலையாளி வேதாளி வாணி குதிரை
சிலையாடு வேடு சிவப்புத்
- தலையில்
திருவிளக்குப் பிச்சி திருக்குன்
றயிற்பெண்
டிருள்முகத்துப் பேதை
இருளன் - பொருமுகத்துப்
பல்லாங் குழியே பகடி
பகவதியாள்
நல்லார்தந் தோள்வீச்சு
நற்சாழல் - அல்லாத
உந்தி அவிலிடி ஊராளி
யோகினிச்சி
குந்திவரும் பாரன் குணலைக்கூத்
- தந்தியம்போ
தாடுங் களிகொய்யும்
முள்ளிப்பூ ஐயனுக்குப்
பாடும்பாட் டாடும் படுபள்ளி
- நாடறியும்
கும்பீடு நாட்டம் குணாட்டம்
குணாலையே
துஞ்சாத சும்மைப்பூச் சோனக
- மஞ்சரி
ஏற்ற வுழைமை பறைமைமுதல்
என்றெண்ணிக்
கோத்தவரிக் கூத்தின் குலம்.”
இந்தப் பாடலில்
பலவகை விளையாடல்கள் கூறப் பெறுகின்றன; அவை யாவும் பாட்டுப் பாடி ஆடுபவை. இப்பாட்டில் உள்ளவற்றில்
இப்போது இலக்கியத்திலும் வழக்கிலும் சில வழங்குகின்றன. கொந்தி ( காய் கொந்தும் விளையாட்டு
), ஆண்டி ( ஆண்டிபாட்டு ), பாண்டி, பாம்பாட்டி, குரவை, கட்களி, கிள்ளுப் பிறாண்டி (
கில்லாப்பரண்டி ), அம்மனை, பந்து, கழங்கு, வண்டு, பல்லாங்குழி, தோள்வீச்சு, சாழல், அவலிடி,
படுபள்ளி என்பவற்றை இன்றும் நினைப்பூட்டிக்கொள்ள இலக்கியமும் வழக்கும் உதவுகின்றன.
திருவாசகம், திவ்யப் பிரபந்தம்,
தத்துவராயர் பாடுதுறை முதலியவற்றில் நாட்டில் வழங்கிய வாய் மொழிப் பாடல்களை அடியொற்றிப்
பெரியோர்கள் இயற்றிய பலவகைப் பாடல்களைக் காணலாம். டாக்டர் ஐயரவர்கள் ஒரு
சொற்பொழிவில் இவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.1 அவை வருமாறு.
அக்கைச்சி, அச்சோ,
அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற் பாட்டு, கழல்,
கந்துகவரி, காக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை,
_____________________________________________________
1. சங்கத் தமிழும்
பிற்காலத் தமிழும், ப. 45.
|