ப
பிறகு செயல்களையும்
குறிப்பிட்டுப் பேசக் கற்றுக்கொண்ட ஆதி மனிதன் நாளடைவில் பழைய நினைவுகளையும், கருத்துக்களையும்
வெளிப்படுத்தவும் தெரிந்துகொண்டான். தன் கருத்தை அப்போதைக்கு வேண்டுமளவுக்கு வெளிப்படுத்துவதோடு
நில்லாமல், தான் கூறுவதைப் பிறரும் நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் தன் மொழியை அமைத்தான்.
வரவர அதில் அழகும் உணர்ச்சியும் மலிந்தன. மனித சமுதாயத்தில் சிலர் நன்றாகப் பேசினார்கள்;
அழகாகப் பேசினார்கள்; உணர்ச்சியை ஊட்டும்படி பேசினார்கள். அவர்களுடைய பேச்சை அப்படியே
பிறர் வாங்கிச் சொன்னார்கள்.
பாடல்கள்
சில சொற்களால் ஆன பாடலை
ஏதோ ஒரு வகையில் அவர்கள் இசையோடு பாடினார்கள். அந்தப் பாடல்களின் ஓசை பிறர் உள்ளத்தை
இழுத்தது. அதோடு அந்தப் பாட்டின் தாளம் கேட்டவர்களிடம் இயக்கத்தை உண்டாக்கியது. பாட்டும்
ஆட்டமும் கலந்தன. அவர்கள் உவகை மிகுதியாகியது.
வாயால் பாட வேண்டியிருந்தமையின்
இசையும் தாளமும் அமைந்த அந்தப் பாட்டுக்கு ஓர் உருவம் வேண்டியிருந்தது. வெறும் ஒலியுருவோடு நில்லாமல்
சொற்களும் கலந்த உருவம் அமைந்தது; சொற்கள் கோவையாய், கருத்தைத் தெளிவாய்ச்
சொல்லுவனவாய், சிறந்த கற்பனைக்கு இடமாய் இருக்கவில்லை. ஆனாலும் அவற்றினூடே உள்ளமும் உள்ளமும்
உணர்ந்து கொள்ளும் ஏதோ ஒருவகை உணர்ச்சி இருந்தது. இசையமைதிக்கும் தாளத்திற்கும் ஏற்ற ஓசை
ஒவ்வொரு பாட்டிலும் இருந்தது.
இப்படி உண்டான மனித குலத்தின்
பழம் பாடல்கள் மெல்ல மெல்ல எங்கும் பரவின; வாய் மொழியாகவே பரவின. புலவர்களும் புத்தகங்களும்
தோன்றாததற்கு முன்பே இந்தப் பாடல்கள் மனித இனத்தின் களியாட்டத்துக்குத் துணையாக எங்கும்
பரவின. ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் இனத்தாரிடம் அந்த மொழியில் அமைந்த பாடல்கள்
பரவி வந்தன.
மனிதன் நாளடைவில்
நாகரிகத்தைக் கற்றுக்கொண்டான். ஆழமாகச் சிந்திக்கத் தெரிந்துகொண்டான். மொழியை வளப்படுத்தினான்.
அதற்கு வரையறைகளை அமைத்துக்கொண்டான். புலவர்கள் தோன்றினார்கள். நாடோடியாக வழங்கும் பாடலின்
இசையையும் தாளத்தையும் எடுத்துக்கொண்டார்கள். சொற்
|