வட

பிரபந்தங்கள்

21

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
    கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
    ...    ...    ... ...    ...    ...    ... ...    ...
    நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.”1

    கம்பர் ஏற்றக்காரன் முதல்நாள் பாதியில் விட்ட பாட்டை மறுநாள் அவன் வாயிலாகக் கேட்குமட்டும் எவ்வளவு முயன்றும் முடிக்க முடியாமல் அல்லலுற்றாரென்று ஒரு வரலாறு வழங்குகிறது.2

    “ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை, பூசாரி பாட்டிற்குப் பின் பாட்டில்லை” என்ற பழமொழி அந்தப் பாடல்கள் தாமாக வருமேயன்றிப் புலமையால் அமைவனவல்ல என்பதைப் புலப்படுத்துகிறது.

    இலக்கணப் புலவராகிய தொல்காப்பியர் நாடோடிப் பாடல்களைப் பண்ணத்தி யென்று கூறி இசை வகுத்தார். இலக்கியப் பெரும் புலவர்கள் அப் பாடல்களில் மனம் செலுத்தி இன்புற்று அவற்றைப் பற்றித் தம் நூல்களில் கூறினார்கள்; அவற்றைப் போன்ற அமைப்பை வைத்துப் பல பாடல்களைப் பாடினார்கள். இதுவரையில் கூறியவற்றிலிருந்து இவை தெள்ளத் தெளிய விளங்கும்.

பிரபந்தங்கள்

    நாடோடிப் பாடல்களை அடியொற்றிப் பாடிய பல பாடல்கள் நாளடைவில் தனிப் பிரபந்தமாக வழங்கலாயின. குறத்தியின் பாட்டிலிருந்து குறம் எழுந்து, பின்பு குறவஞ்சி எழுந்தது. பள்ளர்கள் பாடும் குலவைப் பாட்டு முதலியவற்றிலிருந்து பள்ளேசலும் பள்ளும் தோன்றின. தாலாட்டிலிருந்து தனியே தாலாட்டு நூல்கள் உண்டாயின. தாலாட்டு உருவத்தில் கீதாசாரத்  தாலாட்டு என்ற நூல் ஒன்று தமிழில் உண்டு. பிள்ளைத் தமிழில் வரும் தாலப் பருவமும் குலசேகரப் பெருமாள் சக்கரவர்த்தி திருமகனைப்பாடும் தாலாட்டும் இந்த வகையிலே எழுந்தன. “அம்புலிமானே வாவா” என்று குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் பாட்டைப் பார்த்து அம்புலிப் பருவம் எழுந்தது. ஓடப் பாட்டைப் பார்த்துப் பல புலவர்கள் ஓடப்பாட்டைப் பாடினர்.
___________________________________________________

    1. குயிற் பாட்டு, 3 : 35-44.
    2. இதன் விரிவை. “புது மெருகு” ( கி. வா. ஜ. ) என்னும் புத்தகத்திற்
      காண்க.