பல புலவர
பல புலவர்கள் கும்மி
பாடியிருக்கிறார்கள். அது நாடோடிப் பாடலாக முளைத்துப் பின்பு புலவர் படைப்புக்குள்ளும் புகுந்து
கொண்டது. கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய சிதம்பரக் கும்மியும், அருட்பிரகாச வள்ளலார்
பாடிய கும்மிகளும், வாலைக் கும்மி முதலிய வேறு பல கும்மிகளும் எழுவதற்கு ஆதியில் உருவான நாடோடிக்
கும்மிகளே வழிகாட்டிகள்.
5. நாடோடிப் பாடல்களின்
சிறப்பியல்புகள்
நாடோடிப் பாடல்களுக்கென்று
சில சிறப்பான இயல்புகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாடலை முதல் முதலில் யாரேனும் ஒருவர் இயற்றி
யிருக்கத்தான் வேண்டும். அவர் இலக்கியப்புலமை படைக்காவிட்டாலும் மற்றப் பாமரர்களைப்போல்
இல்லாமல் ஓரளவு சொல்வன்மை உடையவராகவே இருப்பார். கூலி வேலை செய்யும் பெண்கள் தம்மிடம்
உள்ள இயற்கையான ஆற்றலால் அவ்வப்போது பாடல்களைப் பாடுவதும் உண்டு. இலங்கையில் மட்டக்
களப்பு என்னும் பகுதியில் இன்றும் இவ்வாறு பாடல்கள் முளைக்கின்றன. எதுகை, மோனை, ஓசை என்னும்
மூன்றும் தெரிந்தவர்கள் பாடல்களைப் பாடிவிடலாம்.
எதுமை மோனை
எதுகை மோனை என்பவை
தமிழ்நாட்டு மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை என்றே சொல்லவேண்டும். “மானங் கெட்டவளே
- மரியாதை கெட்டவளே, ஈனங் கெட்டவளே - இடுப் பொடிந்தவளே” என்ற வசவில்கூட எதுகையும் மோனையும்
இருக்கின்றன. அடிமுதலில் எதுகை வருவதென்பது தமிழுக்கே அமைந்த தனிச்சிறப்பு. பேச்சு வழக்கில்
எத்தனையோ தொடர்கள் எதுகைச் சிறப்புடையனவாகப் புரளுகின்றன. அக்கிலி பிக்கிலி, அக்கம்
பக்கம், அசட்டுப் பிசட்டு, அடிதடி, அமட்டல் குமட்டல், ஆசாரம் பாசாரம், ஏழை பாழை,
கண்டதுண்டம், காமா சோமா, ஜபதபம் என்பவைபோல உள்ளவற்றைக் காண்க. அப்படியே மோனை நயம்
அமைந்த தொடர்களுக்கும் குறைவில்லை. அல் அசல், ஆடி அமாவாசை, கல்யாணம் கார்த்திகை
கொள்வினை கொடுப்பினை, பற்றுப் பாத்திரம், கோயில் குளம், தோப்புத் துரவு முதலியவற்றைக்
காண்க. பேச்சு வழக்கில்
|