இந

பலவகைப் பாடல்கள்

31

    இந்திரரைப் பார்த்துத்தான் நான் - சாமி
        எடுத்து சொல்வேன் தெம்மாங்கைத்தான்.
    தெம்மாங்குப் பாட்டுப்பாடிச் - சாமி
        தெருத்தெருவாய்ப் போய்விட்டாலும்1

என்பவை தெம்மாங்கினிடையே வருவன. தாலாட்டுப் பாட்டினிடையிலே.

தில்லாலப் பாட்டு என்ன - கண்மணியே
        தெம்மாங்குப் பாட்டு என்ன2

என்று தெம்மாங்கைக் குறிக்கும் இடமும் உண்டு.

கலியாணப் பாட்டவுங்க
        கனிவாய்த்தான் படிக்கையிலே.3

    மாதா மனங்குளிரத் தானுமே - நல்ல
    தாலாட்டுப் பாட்டெல்லாம் பாடுச்சாண்டி.4

    கும்மிப் பாட்டுங் கூடப்பாடி - ஏலங்கிடிலேலோ
    சும்மாட்டைத் தலையில் வைத்து - ஏலங்கிடிலேலோ.5

    கும்மியென்ன கூட்ட மென்ன - கண்மணியே.6
   
கும்மி யடிக்கத் தாதி வேறே.7

    முத்தே முத்தேநீ கும்மியடி - அடி
    மோகன முத்தே கும்மியடி

    கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச் சுக்கட்டும்
    கண்ணாடி முத்தே கும்மியடி.8

    கும்மியடிக்கிற பெண்டுகளா - ஒரு
    கோளாறு சொல்கிறேன் கேளுங்கடி.9

    கும்மி பாடிக் குப்பம் வருவாள்
    எங்கள் முத்துமாரி.10

என்பவற்றில் கல்யாணப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, கும்மி என்ற வகைகளைக் குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம்.
_________________________________________

    1. ப. 15 : 90, 91.                      
    2. 247 : 41.                             
    3. ப. 96 : 76.           
    4. ப. 321 : 7.
    5. ப. 137 : 2.
    6. ப. 247 : 40.
    7. ப. 251 : 18.
    8. ப. 290 : 8.
9. ப. 292 : 4.
    10. ப. 312 : 8.