ஆறு சக
ஆறு சக்கரம் நூறுவண்டி -
குட்டி
அழகான ரெயிலு வண்டி
மாடுகண்ணு இல்லாமல்தான்
- குட்டி
மாயமாத்தான் ஓடுதடி.1
இதைப் பாடியவன் மதுரைப்
பக்கத்துக்காரன் என்பது தெளிவாகிறதல்லவா?
கூந்தலுக்கு இலக்கியங்களில்
வரும் உவமைகள் பல உண்டு. தெம்மாங்குக்காரன் தான் போகும் சாலையிலே பார்த்த பொருளை உவமை
கூறுகிறான்.
ஆலம் விழுதுபோலே - குட்டி
அந்தப் பிள்ளை
தலைமயிரை
ஆளு ஒண்ணும் பார்க்காமல்தான்
- குட்டி
ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே.2
ஆலம் விழுதுபோல்
இருந்த நெடுங் கூத்தலைச் சுருட்டி முடிந்துகொள்கிறாள் அந்தப் பெண். அந்த முடிச்சுக்கும் ஓர்
உவமை சொல்கிறான் அவன், அவனுக்கே உரிய முறையில்; ஆம்; அவன் சொல்லும் உவமையை எந்த இலக்கியப்
புலவரும் சொல்லவில்லை.
ஆலம் விழுது போலே
அந்தப் புள்ளை
தலைமயிரு
தூக்கி முடிஞ்சிட்டாளாம்
தூக்கணத்தாங் கூடுபோலே.3
இந்தத் தெம்மாங்குப்
பாடல்கள் மதுரைப் பக்கத்தில் வழங்கியவை என்பதற்கு வேறொரு சான்றும் கிடைக்கிறது.
கான மயிலேஉன்னைக் - குட்டி
கைவிடுவ தில்லையென்று
மீனாட்சி கோயிலிலே -
குட்டி
வேட்டிபோட்டுத் தாண்டித்
தாரேன்.4
இந்தப் பாடல்களைப்
பாடிய காலத்தில் ஈரோடு சாயச் சேலைக்குப் பேர் பெற்றிருந்ததென்று தெரிகிறது. புடவை எவ்வளவு
நீளமாக இருந்தாலும் போதவில்லையென்று சொல்லுவது அந்தக்காலத்துப் பெண்களுக்கு இயல்பென்ற
இரகசியமும் பின்வரும் தெம்மாங்கினால் புலனாகிறது.
__________________________________________________
1. ப. 5 : 15.
2. ப. 7 : 32.
3. ப. 27 : 169.
4. ப. 12 : 67.
|