ஈ
ஈரோட்டுச் சாயச்சேலை
- குட்டி
இருபத்து நாலுமுழம்
சுத்துக்குப் பத்தலேண்ணு -
குட்டி
சுண்டுறாளாம் மூஞ்சியெல்லாம்.1
பதினெட்டு முழம் சேலையைப்
பற்றித்தான் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்தப் பெருமாட்டிக்கு இருபத்துநாலு முழங்கூடப்
போதவில்லையாம்!
ஆஸ்பத்திரியும் காபித் தண்ணியும்
வந்த பிறகு பாடிய பாட்டு இது:
ஆஸ்பத்திரி மூலையிலே -
குட்டி
ஆளடங்கும் சோலையிலே
காபித்தண்ணி தந்ததாலே
குட்டி
கசக்குதடி என்வாய்பூரா.2
காதலனுக்குக் காதலியினிடம்
உள்ள அருமைப் பாட்டை அவனுடைய புகழுரை காட்டுகிறது:
நாவல் பழமேஅடி - குட்டி
நான்பூசும் சந்தனமே
ஏலம் கிராம்பேகுட்டி -
உன்னை
என்னசொல்லிக் கூப்பிடுவேன்?3
கனவினிடையே காதலனும்
காதலியும் அடிக்கடி சந்திக்க முடியாமல் இடையூறுகள் நேர்கின்றன. அப்போது அவன் ஏங்குகிறான்:
ஆல மரம்உறங்க
அடிமரத்துக் கிளிஉறங்க
உன்மடிமேல் நான்உறங்க
உலகம் பொறுக்கலையே?4
நாலு பேருக்கு நடுவில்
அவளை எப்படி சந்திப்பது? அதோ சற்றுத் தூரத்தில் அவள் தன் தோழியுடன் இருக்கிறாள். அவளைச்
சந்திக்க வேண்டும் என்ற ஆசை. அவளை எப்படி அழைப்பது? பேசாத பேச்சினால் அவன் அழைக்கிறான்.
அதைக் காதலி கண்டுகொள்வதற்குமுன் தோழி கண்டுகொள்கிறாள். மெல்ல அந்தக் குறிப்பை அவளுக்குத்
தெரிவிக்கிறாள்:
______________________________________________
1. ப. 14 : 82.
2. ப. 15 : 89.
3. ப. 17 : 100.
4. ப. 21 : 131.
|