தங்கரத்தினமே!

37

    இதே சுவையமைய, ஒரு கிழவி குமரியாகக் காட்டிக்கொள்வதையும் மற்றொரு பாட்டுச் சொல்கிறது:

நாழிஎண்ணெய் தேச்சிட்டாலும்
        நயனக்கொண்டை போட்டுட்டாலும்
    குலுக்கி நடந்திட்டாலும்
        குமரியாக மாட்டாய் நீ.1

2. தங்கரத்தினமே!

    இதில் உள்ள இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு பாட்டிலும் தங்கரத்தினமே என்ற விளி வருகிறது. 27 பாடல்கள் அடங்கிய பகுதி இது. முதலில் தினைக் கொல்லையில் ஒரு பெண்ணை ஓர் ஆடவன் கண்டு பேசுவதாக வரும் கண்ணிகள் இருக்கின்றன. தினை விதைத்து மகளிரைக் காவல் வைக்கும் வழக்கத்தைச் சில பாடல்கள் சொல்கின்றன.

    தினைக் கதிரைப் பாறையின்மேல் கொட்டி அதைத் தன் காலினால் மிதித்துத் துகைக்கும் வழக்கத்தை வள்ளியின்மேல் ஏற்றிச் சொல்கிறது ஒரு பாட்டு.

வட்ட வட்டப் பாறை தேடிக்
        கொட்டி னாளாம் அடிக்கதிரை
    மோதிரக் காலி னாலே - தங்க ரத்தினமே
        மொரமொ ரண்ணு மிதித்தாள் வள்ளி

                           
-    பொன்னு ரத்தினமே!2

    தேனும் தினை மாவும் பிசைந்து வாழையிலையில் அவள் வாரும் அழகையும் காணலாம்.

கொச்சிமலைத் தேனெடுத்துக்
        கூசாமே மாப்பிசைந்து
    வாழையிலை முறமுஞ்செஞ்சு - தங்கரத்தினமே
        வாருறாளாம் தினைமாவைத்தான்
-
  பொன்னு ரத்தினமே.3

    அந்தக் காலத்தில் ரங்கூன், சிங்கப்பூர், கண்டி முதலிய இடங்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து பல ஆண்களும் பெண்களும் போய் வேலை செய்து பிழைத்தார்கள். அப்படிப் போகும் மோகம் பலருக்கு இருந்தது. ‘தம்முடைய சொந்த ஊரைவிட்டுப் போவதில் என்ன லாபம்?’ என்ற எண்ணமுடையவர்களும்
________________________________________

    1. ப. 26; 161.
    2. ப. 36; 11.
    3. ப. 37; 13.