இல

38

ஆராய்ச்சி உரை

இல்லாமற்போகவில்லை. அந்த எண்ணத்தைக் காட்டுகிறது பின்வரும் பாட்டு:

வண்டியிருக்கு மாடிருக்கு - தங்கரத்தினமே
        வயற்காடு உழுதிருக்கு - பொன்னு ரத்தினமே
    எருமைத் தயரிருக்கு - தங்கரத்தினமே
        ஏண்டிபோறே ரங்கோனுக்குப் - பொன்னு ரத்தினமே?1

    இவ்வாறுள்ள பல கதம்பப் பாடல்களும் இப்பகுதியில் வருகின்றன.

2. ராசாத்தி

    வ்வொரு பாட்டிலும் ராசாத்தி என்ற மகடூஉ முன்னிலை ( பெண்ணை முன்னிலைப்படுத்திச் சொல்வது ) அமைந்த பாட்டுக்களை உடையது மூன்றாம் பகுதி. இப்பகுதியின் தொடக்கத்தில் ஒரு காதலன் தன் காதலிக்குத் திருவிழாக் காட்சிகளைக் காட்டுகிற நிகழ்ச்சி இருக்கிறது. கரும்பு, கற்கண்டு, கடலை, அவல் முதலியவை விற்கிறதை அவன் காட்டுகிறான். பிள்ளைகள் விளையாடுவதையும் மற்போர் நிகழ்வதையும் அவர்கள் பார்க்கிறார்கள். மற்போரில் தன்னோடு பொருதவனைத் தோல்வியுறச்செய்து, ‘பீட்டுக் காண்பித்து’ விட்டான் ஒருவன். அவன் பீரங்கி போன்ற தன் வயிறு பிதுங்கப் பெருமிதத்தோடு நிற்கிறான்,

பீட்டுக் காண்பித்த பீரங்கி வயிறன்
        பெருமை பண்ணுறான் பார் - ராசாத்தி
        பெருமை பண்ணுறான் பார்!2

    அடுத்தபடி ஒரு பெண்ணின் பெருமையை ஒருவன் விரிவாகச் சொல்கிறான். அவள் குளத்துக்கும் கோயிலுக்கும் போகிறாள். பல தாதிப்பெண்களை ஆதரிக்கிறாள். அவர்களுக்கெல்லாம் பல பரிசில்களை வழங்குகிறாள். மந்திர தந்திரக்காரிகளையும், மாற்றாந்தாய்மாரையும், வம்பு செய்யும் ஆடவர்களையும் அவள் கண்டிக்கிறாள்.

    ஒரு பெண்ணைப் பார்த்துப் பல கேள்விகள் கேட்பதாக அமைந்த பாடல்கள் பின்பு வருகின்றன. சோறு ஆக்கிக் குழம்பு வைத்துக் கடைக்குப் போய் ஆடை அணிகளை வாங்கும் செய்கைகளைச் சுட்டிக் காட்டுகிறான், கேள்வி கேட்கும் ஆடவன்.
________________________________________

    1. ப. 39 : 14.
    2. ப. 47 : 19.