அரண

ஆண் பெண் தர்க்கம்

39

அரண்மனைக்காரி ஒருத்தியின் வளவாழ்வையும் வண்மையையும் பற்றிய பாடல்கள் பின்பு உள்ளன. அவள் பல்லாக்கின் மேலும் ஆனையின் மேலும் போகிறாள். ஆடையும் அணியும் அணிகிறாள். தர்மம் செய்கிறாள்.

    இறுதியில் சல்லிக்கட்டு வருணனை வருகிறது. காளையெல்லாம் சாயம் பூசிக் கருத்தாய் நிற்கின்றன.1 கொம்புகள் ரம்பம் போல் உள்ளன. அவை ஓடுகின்றன. ஆட்கள் பிடிக்கிறார்கள்.

4. ஆண் பெண் தர்க்கம்

    ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் எதிரெதிரே பேசும் பேச்சைத் தர்க்கம் என்று சொல்வது தெருக் கூத்து மரபு. இந்த நான்காவது பகுதியில் பலவகையான உரையாடல்கள் வருகின்றன.

    முதலில் ஓராடவன் தான் விரும்பிய பெண்ணை அணுகித் தஞ்சமென்று அடைவதும், அவள் மிஞ்சிப் பேசுவதுமாகிய காட்சியைக் காணலாம். அவன்,

அன்னமே பொன்னம்மா
        கண்ணிரண்டும் சோருதடி அன்னமேஏஏ

என்பதை ஒவ்வொரு தடவையும் விடாமல் சொல்கிறான். அவளோ அதற்கெதிர் ஒவ்வொரு முறையும்,

வாது செய்யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா

என்று சொல்கிறாள்.

    பின்னாலே வரும் வார்த்தைச் சண்டை என்ற பிரிவு முழுவதிலும் கீழ்த்தரமான பேச்சைப் பார்க்கிறோம். இங்கே பல வசவுகளை ஆணும் பெண்ணும் பொழிகிறார்கள்.

    கண்ணாட்டியும் மச்சானும் என்னும் பிரிவில் ஆடவன் பெண்ணை, “என் ஆசைக் கண்ணாட்டி, என் நேசக் கண்ணாட்டி!” என்று விளித்துப் பேசுகிறான். அந்தப் பெண் அவனை, “என் திலக மச்சானே, எங் குலக மச்சானே!” என்று அழைக்கிறாள். அவள் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்க அவன் அவற்றை வாங்கித் தருவதாகச் சொல்லுகிறான்.

சம்பங்கி எண்ணெய் வேணும்
        சைனாப்பட்டுச் சீலைவேணும

_____________________________________________

    1. ப. 53 : 4.