பம
பம்பாய்ச் சோப்பு வேணும்
- என் திலகமச்சானே
பயாஸ்கோப்பு
ராவுக்கே வேணும் - எங் குலகமச்சானே!1
என்ற பாட்டிலிருந்து இவர்கள் நாகரிகம்
முற்றின காலத்தில் தோன்றின இணையென்று தெரிந்து கொள்ளலாம்.
அடுத்தபடி, ஓடும் ஜோடி
வருகிறது. மணம் செய்துகொண்ட ஒருத்தியை வேறு ஓர் ஆடவன் தன்னுடன் ரங்கூனுக்கு ஓடிவந்து விடச்
சொல்கிறான். அவள் தன் ஐயங்களெல்லாம் சொல்ல, அவன் தெளிவிக்கிறான். கடைசியில் அவள்
சம்மதிக்கிறாள். இங்கிலாந்து தேசத்துக்கே போவோம் என்கிறாள்!
இச்சைக் கிசைந்தசிறு
இன்பமுள்ள தங்கமாமா
இச்சணமே புறப்படலாம்
இங்கிலாந்து தேசத்துக்கு.2
காளைமாட்டைத் தேடிக்கொண்டு
ஒரு மங்கை வர அவளை நாடி வந்த ஆடவன் அவளோடு உரையாடுகிறான். வாதம் நிகழ்கிறது. காளைமாடு
என்னும் தலைப்பிலுள்ள பிரிவில் இந்தக் காட்சியைக் காணலாம்.
அடுத்தபடி தாசியின் காதல்
என்ற பிரிவு உள்ளது. ஒருதாசி ஒருவனை நச்சுவதும், இருவரும் வாக்குவாதம் செய்வதும், அவன்
பிறகு அவளைத் தேடிச் செல்வதும், இருவரும் சந்தித்துக் கூடுவதுமாகிய நிகழ்ச்சிகளைக் காட்டும்
பாடல்கள் அதில் வருகின்றன.
பின்வரும் சண்டைப் பேச்சில்
வார்த்தைச் சண்டை வளர்கிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஏசியும் தூற்றியும் வைதும்
உரப்புகிறார்கள். பின்பு சமாதானப் பேச்சும் வருகிறது. சமாதானமாகப் பேசிய பின் தாங்கள்
இன்ன இன்னபடி திருமணத்தை நடத்த வேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். இங்கே கல்யாணத்துக்கு
முன்னும் கல்யாணத்தின் போதும் நிகழும் பல வழக்கமான செயல்களைக் காணலாம்.
மாமன் பல ஊர்களுக்கு
வருகிறாயா என்று தங்கம் தையலாளை அழைக்க, அவள் அங்கெல்லாம் வரமாட்டேன் என்று
சொல்கிறாள். இப்படிச் சில பாடல்கள் உள்ளன. மலையின்மேல் தேயிலைத் தோட்டத்துக்குப்
போய் வேலை செய்தால் அங்கே கூலி முதலியவை கிடைக்குமென்று அவன் கூற, அவள் தனக்கு வேண்டாம்
என்று மறுக்கிறாள்.
_________________________________________________
1. ப. 69 : 5.
2. ப. 74 : 22.
|