ப
பிறகு தொடர்பற்ற பல கண்ணிகள்
வருகின்றன. பின்பு சுண்ணாம்பு குத்தும் பாட்டில் துரைமகன் வருகையை விரிவாகச்
சொல்லுகிறார்கள் பெண்கள். பல வண்டிகள் வருகின்றன. குதிரைகள் வருகின்றன. ஜட்கா, ரிக்ஷா,
மோட்டார், லாரி, சைகிள் எல்லாம் வருகின்றன.
வண்டியிலே வந்த துரை அமலெல்லாம்
செய்கிறான். அவனுக்குத் ‘தீனி’ தயாராகிறது. எதை எதையோ அவன் குடிக்கிறான். பல பழங்களைக்
கொடுக்கிறான். பணியாரங்களை வழங்குகிறான். ‘மச்சானை’க் கூட்டிக் கொண்டு மெத்தை வீட்டுக்குள்
போகிறான்.
பல தோட்டங்கள் அங்கே
இருக்கின்றன. வெள்ளைக்காரர் பலர் ‘லேடி’களுடன் இருக்கிறார்கள்.1 அவர்களிடையே
இந்தத் துரை தளுக்கு நடை நடக்கிறான். பெண்ணுக்கு வேண்டியவற்றையெல்லாம் அவன் தருவானாம். அப்படி
ஒரு பெண்ணைப் பார்த்து மற்றொருத்தி சொல்கிறாள். அவள் தன் வஞ்சகக் கருத்தைக் கடைசியில்
வெளியிடுகிறாள்.
சொத்தான சொத்துக்காரி-ஏலங்கிடி
லேலோ
சொகுசாத்தான்
நீஇருப்பே-ஏலங்கிடி லேலோ
அத்தான் உனக்குத்தானே-ஏலங்கிடி
லேலோ
அல்லாத்தையும் கொடுத்திடுவான்-ஏலங்கிடி
லேலோ.2
தோட்டத்து முதலாளிகளாகிய
வெள்ளைக்காரர்களிற் சிலர் எப்படி இருந்தார்கள் என்பதை ஒருவகையாக இந்தப் பகுதி புலப்படுத்துகிறது.
இந்தக் காட்சிக்குப் பின்
ஒரு பெண் வயலுக்குச் சென்று கதிரறுத்துக் கூலிபெற்றுக் கடைக்குப்போய் வேண்டிய பொருளை வாங்குவதைச்
சொல்லும் பாடல்கள் உள்ளன. பிறகு சந்தனத் தேவன் நிலத்தைப் பார்த்துவிட்டு
வருவதைச் சில பாடல்கள் சொல்கின்றன.
நாற்று நடவை வருணிக்கும் கண்ணிகளைப்
பிறகு காண்கிறோம். பின்பு கதிர்விளைய, அதை அறுக்க ஆள் தேடுகிறார்கள். விறகொடிக்கும் பெண்
வருகிறாள். காளைகள் சூடடிக்கின்றன. எங்கே பார்த்தாலும் நெல்லாக இருக்கிறது.
சந்தனத் தேவன்
பெருமையை 54 கண்ணிகள் சொல்கின்றன. பாண்டிநாட்டில் வாழ்ந்திருந்த திருடன் அவன்.
சொகுசான வாழ்க்கை நடத்தினவன். அவன் பருத்திக்காட்டை உடையவன்;
_______________________________________________
1. ப. 134 : 87.
2. ப. 135 : 104, 105.
|