11
11. கும்மி
எல்லாச் சாதியாரும் பல
சமயங்களில் ஆடிப்பாடி விளையாடும் ஆட்டம் கும்மி. அதற்கென்று தனியே பாட்டும், அதற்கு
வரையறையான மெட்டும் இருக்கின்றன. இந்தப் பகுதியில் நாலு வேறு பிரிவுகளைக் காணலாம்.
முதல் பிரிவில் வரலாற்றோடு
தொடர்புடைய சில செய்திகள் வருகின்றன.
கல்லு மலைமேலே கல்லுருட்டி-அந்தக்
கல்லுக்கும் கல்லுக்கும்
அணைபோட்டு
மதுரைக் கோபுரம் தெரியக்
கட்டி-நம்ம
மன்னவன் வாறதைப்
பாருங்கடி1
என்பது மதுரைக் கோபுரம் கட்டிய
வரலாற்றைக் குறிப்பிடுகிறது. இது நாயக்கர் காலத்தில் நிகழ்ந்தது.
ஊரான் ஊரான் தோட்டத்திலே-அங்கே
ஒருத்தன் போட்டது
வெள்ளரிக்காய்
காசுக்கு ஒண்ணொண்ணு விற்கச்சொல்லி-அவன்
காயிதம் போட்டானாம்
வேட்டைக்காரன்2
என்பதும் ஒரு பழைய வரலாற்றை உள்ளடக்கியது.
‘காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்’ என்றும் வழங்குவதுண்டு. ஒரு பாட்டில் வேளாங்கண்ணித்
தாயாரும் மற்றொரு பாட்டில் திருப்பத்தூர்த் தேவமாதாவும் வருகிறார்கள். அயல் நாட்டிலிருந்து
வந்த புறச் சமய வழிபாடும் தமிழ்நாட்டில் ஒன்றித் தமிழ் நாடோடிப் பாடல்களிலும் இடம் பெற்றுவிட்டதை
இவை காட்டுகின்றன. இதற்குரிய எடுத்துக்காட்டுகளைப் பின்வரும் சில பகுதிகளில் மிகுதியாகக் காணலாம்.
அடுத்த வரிசையில் ஒன்றுக்கொன்று
தொடர்பில்லாத 20 பாட்டுக்கள் இருக்கின்றன. சரசுவதி வணக்கத்தோடு அது தொடங்குகிறது.3
பெண்கள் தாம் உடுத்திருக்கும்
சீலைகளின் வண்ணச் சிறப்பைப் பாடுகிறார்கள்.
தயிருக் கூடையைத் தலையிலே
வைத்துத்
தங்கக் கக்கம்
பிச்சீலைப் பட்டுடுப்போம்
தயிருக் கூடை தளும்பினா
லும்எங்கள்
தங்கக்கம் பிச்சீலை
மங்காது!
_____________________________________________
1. ப. 289 : 2. 2. ப. 290 : 11.
3. ப. 291 : 1.
|