வம

60

ஆராய்ச்சி உரை

வம்புதும் புநீ செய்யப்பார்த் தாயானால்
        அம்புவந் துன்னைத் துளைக்குமடா1

என்று அச்சுறுத்துகிறாள். அப்போது வேடர்கள் அங்கே வர, முருகன் தள்ளாத கிழவனைப்போலக் கோலம்கொள்கிறான். சிவயோகியைப்போல உட்கார்கிறான். அண்ணன்மாராகிய வேடர்கள் அக்கிழவனிடம் மரியாதையாகப் பேசி வள்ளியிடம் அழைத்துச் சென்று, “அம்மா, நம் குலதெய்வம்போல் இவரை ஆதரிக்க வேண்டும்” என்று சொல்கிறார்கள். வள்ளி அந்தச் சொல்லைத் தட்டாமல் அந்தப் பண்டாரத்தை ஆதரிக்கிறாள்; தேனும் பழமும் தினைமாவும் கொடுக்கிறாள்.

    இப்படி இருக்கையில் அந்த ஆண்டிப் பண்டாரம் திடீரென்று களை வந்து மூடிச் சாய்கிறான். தொண்டை வறளுகிறதென்று கத்தி வைகிறான். அவள் தண்ணீர் கொடுக்க, “நீ மாவைக் கொடுத்ததனால் இப்படி ஆயிற்று. நீ கொடுக்கும் தண்ணீரை உண்ணமாட்டேன்” என்று அவன் சொல்ல, அவள் அவனைக் கேணிக்குக் கூட்டிக்கொண்டு போகிறாள். அவன் தண்ணீர் குடித்து அதில் விழுந்துவிடுகிறான்.

    “கையைப் பிடித்து என்னைத் தூக்கடி பாவி” என்று கத்துகிறான் கிழவன். பின்பு மறுபடியும் வேடனாகி நிற்க, வள்ளி அவனைச் சினந்து பேசுகிறாள். மீட்டும் அண்ணன்மார் வரவே கந்தன் வேங்கைமர மாகிறான். அதைக் கண்டு அவர்கள் போய் விட, மீண்டும் முருகன் வேடனாக முன் நிற்கிறான்; கெஞ்சுகிறான்.

    இதற்குமேல் பாடல்கள் இல்லை. கதை அரைகுறையாக நிற்கிறது.

    கும்மி என்ற பகுதியில் இறுதியில் இருப்பது மாரியம்மன் கும்மி. இந்த நாட்டில் மாரியம்மனைப் பற்றி வழங்கும் பாடல்கள் பல. அவளே பகவதி, அவளே காளி, அவளே காமாட்சி, அவளே பார்வதி என்று இந்தக் கும்மி புகழ்கிறது.2

12. தெய்வம்

    பன்னிரண்டாவது பகுதி தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் அடங்கியது. முதலில் முத்துமாரி பாட்டு வருகிறது. பாரதியார் இந்தப் பாட்டின் மெட்டை அறிந்து அதே மெட்டில் தாம் தனியே முத்து மாரியின்மேல் ஒரு கவிதை பாடியிருக்கிறார்.
____________________________________________________

    1. ப. 302 : 64. 2. ப. 307 : 2.