என
என்று ஏசுபிரானைப் பிறர் சாஷ்டாங்கமாக
வணக்கம் புரிந்ததாக நம் நாட்டு மரபை ஏற்றிப் பாடுகிறான் பாவலன்.
மும்மூர்த்தி என்ற வழக்கு,
பாரத நாட்டுக்கு உரியது. இதை ஏசுநாதரோடு சார்த்தி,
மூணுபேர் உனக்கில்லையோ-சின்னப்
பாலகா
மும்மூர்த்தியும் நீயல்லவோ-சின்னப்பாலகா1
என்று சொல்கிறான்.
தமிழ்நாட்டுக் குழந்தையைப்
போல ஏசு வளர்கிறார். தமிழன் பாடும் ஏசு அப்படி வளர்ந்தால்தான் அவன் உள்ளமென்னும் சிங்காதனத்தில்
வீற்றிருக்க முடியும்.
சட்டிபானை எல்லாம் வச்சுச்-சின்னப்பாலகா
கூட்டாஞ் சோறு ஆக்கினையா-சின்னப்பாலகா
ஏழுவய சாகலையோ-சின்னப்பாலகா
எழுத்தாணி பிடிக்கலையோ-சின்னப்பாலகா2
என்பவற்றைத் தமிழ்நாட்டுப்
பிள்ளைகள் சிறு சோறு ஆக்குவதையும், எழுத்தாணியால் எழுதுவதையும் நினைந்தே பாடியிருக்கிறான் இந்தக்
கிறிஸ்துவ நாடோடிக் கவிஞன் என்பதில் ஐயமே இல்லை
உலகராச்சி யத்தைப்பற்றிச்-சின்னப்பாலகா
உசத்தி ஒன்றும் பேசாமேநீ-சின்னப்பாலாக
வானராச்சி யத்தைப்பற்றிச்-சின்னப்பாலகா
வர்ணிச்சுநீ பேசலையோ-சின்னப்பாலகா3
என்று ஏசு பெருமான் பரமபிதா அரசாளும்
பரலோக அரசைப் பற்றி உபதேசித்ததை நினைப்பூட்டி இப்பாட்டு நிறைவடைகிறது.
13. பல கதம்பம்
இந்த நாடோடிப் பாடல்
தொகுதியில் கடைசிப் பகுதியில் மூன்று வெவ்வேறு பாட்டுக்கள் இருக்கின்றன. தாது வருஷத்தில் (
1876 ) ஒரு பஞ்சம் உண்டாயிற்று. அப்போது தமிழ்நாட்டு மக்கள் மிகவும் துன்புற்றார்கள். அந்தப்
பஞ்சத்தைப்பற்றி அக்காலத்தில் வேதநாயகம் பிள்ளை முதலிய பல புலவர்கள்
பாடியிருக்கிறார்கள்.4
அதைப்பற்றி ஒரு பாட்டு இதில்
இருக்கிறது. தாய் வேறே, பிள்ளை வேறே என்று பிரிந்த அவலத்தையும், மாடுகள் பட்டினி
_____________________________________________________
1. ப. 326:24, 2. ப. 326:33. 327:35. 3. ப. 332:107, 108.
4. என் சரித்திரம்
( டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் ), ப. 569.
|