க
கிடந்து இறந்த அலங்கோலத்தையும்,
வயிறு ஒட்டி ஆணும் பெண்ணும் அலறிய துயரத்தையும், கண்ட இடங்களிலெல்லாம் பிணம் கிடந்த கண்ணராவியையும்
பாட்டு விரிக்கிறது.
அக்காலத்தில் இந்தியாவின்
ஆட்சியுரிமை விக்டோரியா மகாராணியிடம் இருந்தது. அரசாங்கத்தார் கஞ்சித்தொட்டி வைத்து
உதவி செய்ததும் இந்தப் பாட்டினால் தெளிவாகிறது.
மகாராணி புண்ணியத்திலே-ஓசாமியே
மார்கழிப் பஞ்சம் நின்றதே-ஓசாமியே
கஞ்சித் தொட்டி போட்டார்களே-ஓசாமியே
அன்புடனே சலுக்கார்தானே-ஓசாமியே1
என்ற கண்ணிகளில் இச் செய்தியைக்
காணலாம்.
தொதுவர் பாட்டு என்ற
பாடலில், ஒருவன் நீலகிரிக்குச் சென்று தொதுவர்களைக் கண்டு, அவர்களிடம் எப்படிப் பழகுகிறதென்று
தெரியாமல் அடிபட்ட கதை வருகிறது. அந்தத் தொதுவர்களின் நிலையை,
அவுங்க ளுக்கு ஆடையில்லை
அம்மா மார்க்குப்
புடைவையில்லை
பிறந்த கோலத் தோடேயும்
பரந்த கோலத் தோடேயும்
வெட்கஞ் சிக்கி இல்லாமலே
வெளியே வந்து நின்னாங்களே2
என்று பாடுகிறான் அவன்.
இறுதியில் இருப்பது
வெள்ளைக்காரன் பாட்டு. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டுக்கு வந்து பலவகையான நன்மைகளைச் செய்தார்கள்
என்று அக்காலத்தில் பல புத்தகங்கள் வெளியாயின. சிலவற்றிற்குப் பரிசும் கிடைத்தது. பெரிய
மனிதர்கள் பலர் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார்கள். அந்த முறையில் நாடோடி மக்களிடம்
யாரோ ஒருவன் எழுதிப்பரப்பிய பாட்டு இது
இன்னம் என்ன செய்தானையா
இந்தவெள்ளைக் காரன்
இன்னம் என்ன செய்தானையா
எடுத்துச் சொல்லு கேட்பேன்3
என்று ஒருவன் கேட்க 39 கண்ணிகளில்
வேறொருவன் விடையளிக்கிறான். காணாத தேசத்தை வெள்ளைக்காரன் கண்டுபிடித்
_____________________________________________________
1. ப. 335:14, 336:21. 2.
337:23-5. 3. ப.
340:1.
|