இலக்கியங்களில் காணாத
பல செய்திகள் நாடோடிப் பாடல்களில் வருகின்றன. வாழ்க்கையின் பல கோணங்களையும்
நெருங்கிக் கண்ட நாடோடிக் கவிஞன் தான் கண்டதைக் கண்டபடி சொல்லுகிறான். அவன் பாட்டில்
சமுதாயத்தில் உள்ள பல பழக்க வழக்கங்களைக் காணுகிறோம். இடத்திற்கும் வகுப்பிற்கும், காலத்திற்கும்ஏற்ப
இவை வேறுவேறாக இருக்கும்.
கீழே வரும் அகராதியில்
பழக்க வழக்கங்களோடு பல செயல்களும், சில விலங்கினங்களின் செய்கைகளும் காணப்படும். எண்கள்,
பக்க எண்களைக் குறிப்பவை.